• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • The Quiet Place 2: ஹாலிவுட்டுக்கு நம்பிக்கை அளித்த ஹாரர் படம்!

The Quiet Place 2: ஹாலிவுட்டுக்கு நம்பிக்கை அளித்த ஹாரர் படம்!

தி கொயட் ப்ளேஸ் 2

தி கொயட் ப்ளேஸ் 2

தி கொய்ட் பிளேஸ் 2 நேற்றுவரை யுஎஸ்ஸில் 58.50 மில்லியன் டாலர்களையும், யுஎஸ் தவிர்த்த மற்ற நாடுகளில் 22 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளது.

  • Share this:
    உலகின் பாதி திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. திறந்திருக்கும் பகுதிகளிலும் திரையரங்குக்கு செல்ல மக்கள் தயக்கம் காண்பிக்கின்றனர். ஓடிடியே ஒரே ரட்சகர் என்ற நிலையில், புதிதாக வெளியான ஹாரர் படம் ஒன்று திரையரங்குகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

    2018-ல் வெளியான தி கொய்ட் பிளேஸ் ஆங்கில திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றது. இந்த ஹாரர் படத்தின் மொத்த பட்ஜெட் 17 மில்லியன் டாலர்கள். யுஎஸ்ஸில் இப்படம் 188 மில்லியன் டாலர்களை வசூலித்தது. யுஎஸ் அல்லாத பிற நாடுகளில் இதன் வசூல் 152.9 மில்லியன் டாலர்கள். மொத்தமாக உலக அளவில் 340.95 மில்லியன் டாலர்கள். நமது ரூபாயில் ஏறக்குறைய 2500 கோடிகளுக்கும் மேல்.

    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மே 28-ம் தேதி வெளியானது. யுஎஸ் இன்னும் கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மீளாத நிலையில் சுமார் 3,726 திரையரங்குகளில் இந்த இரண்டாம் பாகம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு) இப்படம் 48.38 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இது முதல் பாகத்தின் முதல்வார இறுதி வசூலைவிட சுமார் 2 மில்லியன் டாலர்கள் குறைவு. எனினும் இந்த பேரிடர் காலத்தில் முதல்வார இறுதியில் 48 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்திருப்பது திரையரங்குகளுக்கு தெம்பூட்டியுள்ளது.

    தி கொய்ட் பிளேஸ் 2 நேற்றுவரை யுஎஸ்ஸில் 58.50 மில்லியன் டாலர்களையும், யுஎஸ் தவிர்த்த மற்ற நாடுகளில் 22 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளது. இதில் 14 மில்லியன் டாலர்கள் சைனாவிலிருந்து மட்டும் கிடைத்துள்ளது. உலக அளவில் இதுவரை 80.50 மில்லியன்களை இப்படம் வசூலித்துள்ளது.

    உலக நாடுகளில் பெரும்பாலானவை இன்னும் சகஜநிலைக்கு திரும்பவில்லை. இந்தியா உள்பட பல நாடுகளில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் தி கொய்ட் பிளேஸ் முதல் பாகம் வசூலித்த 340 மில்லியன் டாலர்களை இரண்டாம் பாகம் வசூலிக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும், யுஎஸ்ஸில் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் முதல்வார இறுதியில் வசூலித்திருப்பது, அங்குள்ள திரையரங்குகளுக்கு திருப்தியை அளித்துள்ளது. ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமிருக்கும் யுஎஸ்ஸில் திரைப்படங்களை திரையரங்கில் வந்து பார்க்கும் ஆர்வம் குறையவில்லை என்பது, இந்திய திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளிக்கும் செய்தி.

    தி கொயட் பிளேஸ் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய John Krasinski யே இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளது குறிப்படத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: