Home /News /entertainment /

கூழாங்கல் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு விருது!

கூழாங்கல் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு விருது!

கூழாங்கல்

கூழாங்கல்

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் இவ்விழா நடைபெறும். இதில் இந்திய அளவில் பிராந்திய மொழிகளில் திரைப்படங்கள் திரையிடப்படும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Puducherry (Pondicherry)
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு விருதினை அறிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் இவ்விழா நடைபெறும். இதில் இந்திய அளவில் பிராந்திய மொழிகளில் திரைப்படங்கள் திரையிடப்படும். இவ்வாண்டிற்கான விழா 9ஆம் தேதி துவங்குகிறது. அதில்   சிறந்த திரைப்படத்துக்கான விருதை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.

சங்கரதாஸ் சாமிகள் பெயரில் சிறந்த திரைப்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கூழாங்கல்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

பல்வேறு பிரபலமான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டு விருதையும் வென்று வருகிறது. அந்த வரிசையில் இப்போது புதுச்சேரி அரசின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த படமாக கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட இயக்குனருக்கு 9ஆம் தேதி மாலை விருதினை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி கவுரவிக்கிறார்.

Also read... ஜெயலலிதா நடிக்க மறுத்த ரஜினி படம்

தொடர்ந்து 10ம் தேதி முதல்  13ம் தேதி வரை திரைப்படவிழாவில்  பிராந்திய மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

திரையிடப்படும் படங்களின் விவரம்...

9ம் தேதி-கூழாங்கல் (தமிழ்)

10ம் தேதி-நாட்யம்(தெலுங்கு)

11ம் தேதி-சன்னி(மலையாளம்)

12ம் தேதி-கல்கொக்கோ(வங்காளம்)

13ம் தேதி-ஆல்பா பீட்டா காமா(இந்தி)

நகரின் மையத்தில் உள்ள அலியான்ஸ் பிரான்சே அரங்கில் விருது விழா மற்றும்  திரைப்பட விழா நடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Puducherry

அடுத்த செய்தி