நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘விஜய் 67’ படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. படத்தில் இடம்பெறும் நடிகர்கள் உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் - இசை, மனோஜ் பரமஹம்சா - ஒளிப்பதிவு என அப்டேட்டில் இருந்த தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். நண்பன், பீஸ்ட் படங்களுக்கு பிறகு 3வது முறையாக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர் வடிவமைக்கவுள்ளார். படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும், கலை இயக்குநராக சதிஷ் குமாரும் பணியாற்றவுள்ளனர். அதே போல லோகேஷ் கனகராஜுடன் ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி இணைந்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகின்றனர். மேலும் இந்தப் படத்துக்கு நடன இயக்குநராக தினேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தினேஷ் தான் நடனம் அமைத்திருந்தார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். தளபதி 67 படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் கடந்த 3-ம் தேதி தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர்.
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio 😉#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
இந்தப் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பிற்காக விமானத்தில் விஜய் மற்றும் த்ரிஷா உட்பட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay