ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலகளவில் கொட்டும் வசூல்! அம்மாடியோவ் சொல்லவைக்கும் பொன்னியின் செல்வன் கலெக்‌ஷன்!

உலகளவில் கொட்டும் வசூல்! அம்மாடியோவ் சொல்லவைக்கும் பொன்னியின் செல்வன் கலெக்‌ஷன்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதில் தமிழகத்தில் மட்டும் 163 கோடி வசூலித்திருப்பதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா வசூல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 750 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

அதே போல் இரண்டாவது இடத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடியை கடந்துள்ளது.

இந்த நிலையில் 400 கோடி ரூபாய் கடந்த மூன்றாவது தமிழ் படம் என்ற என்ற பெயரை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி 13 நாட்கள் மட்டுமே ஆகிறது என்பதால், இன்னும் வசூலில் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது என திரைத்துறையில் கூறுகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தில் இந்த திரைப்படம் 190 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ponniyin selvan