இயக்குனர் பாலா தனக்கு 25 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் பாலா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
விக்ரம் - சூர்யா உள்ளிடோர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்தை எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் பி.ஏ.துரை என்பவர் தயாரித்திருந்தார். அந்த திரைப்படத்தை பாலா இயக்கினார்.
பிதாமகன் வெளியாகி விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்தது. அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் தயாரிப்பாளர் வி.ஏ. துரை, மீண்டும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குநர் பாலாவிற்கு 25 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்குப் பிறகு பாலா மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக் கொடுக்குமாறு நேற்று தயாரிப்பாளர் வி.ஏ.துரை, இயக்குநர் பாலா அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று ஒரு நாள் முழுவதும் பாலா அலுவலகத்தில் அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இரவு 10 மணி ஆனபோதும் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவில்லை.
இந்த நிலையில் இயக்குநர் பாலா அலுவலக ஊழியர்கள் வி.ஏ.துரையை அலுவலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இருந்த போதிலும் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Also read... விஜய்க்கு வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத்திற்கு இத்தனை கோடிகள் சம்பளமா?
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பிரச்சனையை முடித்துக் கொடுப்பதாக வி.ஏ. துரைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அவர் பாலா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை ஆகியோருக்கு இடையிலான பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director bala, Entertainment