• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • போட்ட காசு கிடைச்சிடுச்சி - தலைவி தயாரிப்பாளர்...!

போட்ட காசு கிடைச்சிடுச்சி - தலைவி தயாரிப்பாளர்...!

தலைவி

தலைவி

ஒரு படத்தை பல மொழிகளில் வெளியிடுவதில் இது ஓர் வசதி. படம் சுமாராகப் போனாலும், ஒவ்வொரு மொழிக்குமான சேட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி உரிமை மூலம் கணிசமான பணத்தை பார்க்க முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தலைவி படம் திரையரங்குகளில் எதிர்பார்த்ததைவிட சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. சமீபத்தில் திரையரங்கில் வெளியான பொல்பாட்டம், ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகையில் வசூலும் மிகக்குறைவு. இந்நிலையில், தலைவி படத்துக்கு செலவு செய்த பணம் திரும்பி கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தலைவி படத்தை சுமார் 100 கோடியில் தயாரித்ததாக கூறுகிறார்கள். படத்தை ஓடிடியில் வெளியிட்டால் இந்தப் பணம் திரும்ப வராது என்பதாலேயே திரையரங்கு வெளியீட்டை தேர்வு செய்தனர். படம் திரையரங்குகளில் சுமாராகப் போகும் நிலையில், படம் குறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி, ஆடியோ, டிஜிட்டல், சேட்டிலைட், மற்றும் ஓடிடி உரிமை மூலமாக படத்திற்கு செலவு செய்த பணம் மொத்தமும் திரும்ப கிடைத்ததாக கூறியுள்ளார். அதாவது, திரையரங்கு வசூல் குறைவாக இருந்தாலும் அதனால் தனக்குப் பாதிப்பில்லை, போட்ட பணம் வந்துவிட்டது என்று பொருள்படும்படி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓடிடியில் படத்தை நேரடியாக வெளியிட நல்ல ஆஃபர்கள் வந்த போதும், .எல்.விஜய் படத்தை பிரமாதமாக எடுத்திருந்ததால், திரையரங்கில் வெளியிடுவதே சரி என திரையரங்கு வெளியீட்டை தேர்வு செய்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்கலாம் என்று அவருக்கு ஐடியா கொடுத்தது அவரது மனைவி பிருந்தா எனவும் போட்ட பணத்துக்கு மேலேயே திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சி, மொத்த டீமுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்

Also read... மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா!

ஒரு படத்தை பல மொழிகளில் வெளியிடுவதில் இது ஓர் வசதி. படம் சுமாராகப் போனாலும், ஒவ்வொரு மொழிக்குமான சேட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி உரிமை மூலம் கணிசமான பணத்தை பார்க்க முடியும். அதனாலேயே ஒரு படத்தை பல மொழிகளில் வெளியிடும் முறை தற்போது பரவலாகி வருகிறது. இதுவே தலைவி தயாரிப்பாளரையும் காப்பாற்றியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: