Home /News /entertainment /

சீனுராமசாமி, ஜீ.வி.பிரகாஷ் படத்தின் சூப்பர் அப்டேட்...!

சீனுராமசாமி, ஜீ.வி.பிரகாஷ் படத்தின் சூப்பர் அப்டேட்...!

சீனுராமசாமி, ஜீ.வி.பிரகாஷ் படத்தின் சூப்பர் அப்டேட்

சீனுராமசாமி, ஜீ.வி.பிரகாஷ் படத்தின் சூப்பர் அப்டேட்

ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை நாளை வெளியிடுவதாக தயாரிப்பாளர் கலைமகன் அறிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் முதல்முறையாக நடிக்கிறார். இந்தப் படம் குறித்த முக்கியமான அப்டேட்டை தயாரிப்பாளர் தரப்பு வெளியிட்டுள்ளது.

கிராமப்புற மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாக தேர்வு செய்து படமாக்கி வந்தார் சீனு ராமசாமி. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் கண்ணே கலைமானே. உதயநிதி, தமன்னா நடித்த இப்படம் சுமாராகவே போனது. அதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மாமனிதன் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



புதிதாக ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தை சீனு ராமசாமி தொடங்கியுள்ளார். இந்தப் படம் அவர் இதுவரை இயக்கிய ஜானரிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ஆக்ஷன் த்ரில்லராக தயாராகிறது. வழக்கமான நகர்ப்புறத்து ஆக்ஷன் த்ரில்லராக இல்லாமல் இதையும் கிராமம் சார்ந்து எடுத்து வருகிறார். காயத்ரி நாயகியாக நடிக்கிறார்

Also read... ஹரி இயக்கத்தில் அருண் விஜய் - ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்!



ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை நாளை வெளியிடுவதாக தயாரிப்பாளர் கலைமகன் அறிவித்துள்ளார். தற்போது இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. ஜீ.வி.பிரகாஷ், காயத்ரி சம்பந்தப்பட்ட காட்சியை சீனு ராமசாமி இயக்கி வருகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: GV prakash, Seenu ramasamy

அடுத்த செய்தி