கேப்டன் இந்தியா ஒரிஜினல் அல்ல - தயாரிப்பாளர் புகார்!

கேப்டன் இந்தியா

கேப்டன் இந்தியா படத்தை அறிமுகப்படுத்துகையில், இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய  மீட்பு நடவடிக்கையை பின்னணியாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாக அறிவித்திருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கார்த்திக் ஆரியன் நடிப்பில் ஹன்சல் மேத்தா அறிவித்த படம் கேப்டன் இந்தியா. ரோனி குருவிலா இன்னொரு தயாரிப்பாளருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். ஹெவி பட்ஜெட். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது இந்தித் திரையுலகே திரும்பிப் பார்த்தது. இன்டர்நேஷனல் லெவலில் பேசக்கூடிய அளவில் டாப்பாக இருந்தது பர்ஸ்ட் லுக். 

ஹன்சல் மேத்தா அலிகார், ஷாகித், சிட்டிலைட்ஸ் போன்ற சென்சிடிவான படங்களை தந்தவர். நல்ல கிரியேட்டர். அவர் இயக்கத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கார்த்திக் ஆரியன் அதிர்ஷ்டம் என்றே சொல்லியிருந்தார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு அபஸ்வரம். எங்களின் ஆபரேஷன் ஏமன் திரைப்படத்தின் கதையை சுட்டே கேப்டன் இந்தியாவை எடுக்கிறார்கள் என குண்டைத் தூக்கிப் போட்டார் சுபாஷ் காலே. இவர் ஆபரேஷன் ஏமன் திரைப்படத்தின் தயாரிப்பாளர். என்ன காரணம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேப்டன் இந்தியா படத்தை அறிமுகப்படுத்துகையில், இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய  மீட்பு நடவடிக்கையை பின்னணியாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாக அறிவித்திருந்தனர். கார்த்திக் ஆரியன் பைலட் வேடத்தில் பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருந்தார். இரண்டையும் கூட்டிக் கழித்து, 2015 இல் ஏமனில் உள்நாட்டு கலவரம் வெடித்த போது இந்தியா அங்குள்ள இந்தியர்களையும் பல வெளிநாட்டவர்களையும் காப்பாற்ற ஆபரேஷன் ராகத் என்ற பெயரில் அளவில் மீட்பு நடவடிக்கை எடுத்தது. ஜெனரல் விகே சிங் இதற்கு தலைமையேற்றார். இதனை மையப்படுத்தி ஆபரேஷன் ஏமன் படத்தை எடுத்து வருகின்றனர். கேப்டன் இந்தியா பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருப்பது ஏமனில் உள்ள சனா நகரம். அதனால் கண்டிப்பாக இது எங்களின் ஆபரேஷன் ஏமனை காப்பி செய்து எடுக்கப்படும் படம்தான் என அடித்துச் சொல்கிறார் சுபாஷ் காலே.

Also read... நாயாட்டு தெலுங்கில் ரீமேக் - நிமிஷா சஜயன் வேடத்தில் பிரபல நடிகை!

உண்மைச் சம்பவத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. யார் வேண்டுமானலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் எடுக்கலாம். அதனால் கேப்டன் இந்தியாவை சட்டப்படி தடுக்கவோ தடை செய்யவோ முடியாது. எனினும் ஹன்சில் மோத்தா போன்ற ஒரு ஆள் படத்தை எடுக்கையில் தங்கள் படம் பாதிக்கப்படும் என சுபாஷ் காலே கவலைப்படுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: