முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் - கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு

கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் - கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

கனல் கண்ணனை கைது செய்வதற்காக மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டரும் இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு தலைவருமான கனல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயலில் இந்து முன்னனி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பேசிய ஸ்டண்ட்ஸ் மாஸ்டரும், இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகியுமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றும் கூறியிருந்தார்.

Also read... சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு - நடிகர் கார்த்தி கருத்து

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், கனல் கண்ணனை கைது செய்வதற்காக மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

-செய்தியாளர்: சோமசுந்தரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment