ராம் சரண் படத்தின் போட்டோஷுட்டை நடத்திய ஷங்கர்!

ராம் சரண் படத்தின் போட்டோஷுட்டை நடத்திய ஷங்கர்

2.0 படத்துக்குப் பிறகு கமலை வைத்து இந்தியன் 2 படத்தை தொடங்கிய ஷங்கர், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, ராம் சரண் நடிக்கும் பட வேலைகளில் கவனம் செலுத்தினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படத்தின் போட்டோஷுட் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

2.0 படத்துக்குப் பிறகு கமலை வைத்து இந்தியன் 2 படத்தை தொடங்கிய ஷங்கர், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, ராம் சரண் நடிக்கும் பட வேலைகளில் கவனம் செலுத்தினார். இது தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகும் பான் - இந்தியா திரைப்படமாகும். தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே தடைகள் வந்தவண்ணம் இருந்தன. இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே பிற படங்களை ஷங்கர் இயக்க வேண்டும் என இடைக்கால தடை கேட்டு இந்தியன் 2 தயாரிப்பாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இது முதல் தடை. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட மீண்டும் பட வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன

Also read... சந்தானம் படத்தில் சூப்பர் ஹிட்டான கமல் பாடல்...!

இந்தப் படத்தின் ஒன் லைனை சொன்னவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒன் லைன் தன்னுடையது என அவரது உதவி இயக்குனர் செல்வமுத்து புகார் அளித்தார். இது அடுத்த தடை. அந்தப் பிரச்சனை சுமூகமாக பேசி அமுக்கப்பட்ட நிலையில், இன்று படத்தின் போட்டோஷுட்டை நடத்தினார் ஷங்கர். படத்தில் ராம் சரணின் தோற்றம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கேற்ப விதவிதமான மேக்கப் மற்றும் கெட்டப்பில் போட்டோக்கள் எடுக்கப்பட்டன

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: