Home /News /entertainment /

32 வருடங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் நடித்த பாலம் திரைப்படம்

32 வருடங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் நடித்த பாலம் திரைப்படம்

பாலம் திரைப்படம்

பாலம் திரைப்படம்

இளைஞர்கள் செய்த செயல் சரியா, தவறா என்று தொலைக்காட்சியில் முக்கிய தலைவர்களின் கருத்து கேட்பது போல ஒரு காட்சி வரும். இதில் நிஜமான அரசியல்வாதிகளையும், அரசியல் விமர்சகர்களையும் பயன்படுத்தியிருந்தார் கார்வண்ணன்.

  • News18
  • Last Updated :
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வப்போது திரைப்படங்கள் பார்த்து அது பற்றிய தனது கருத்தை எழுதி வருகிறார். ஆனால் ஆதிகாலம் தொட்டு அவருக்கு அலர்ஜியாக இருப்பது திரைப்படங்களும், திரைப்பட நட்சத்திரங்களும். நடிகர்களால் இந்த நாடு குட்டிச்சுவராகி போனது என்று டாக்டர் ராமதாஸ் நேரடியாகவே குற்றம்சாட்டி இருக்கிறார். அப்படிப்பட்டவர் திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. 1990 அந்த நிகழ்வு நடந்தது.

1990 மார்ச் 10-ஆம் தேதி இதே நாளில் கார்வண்ணன் இயக்கிய பாலம் திரைப்படம் வெளியானது. அந்த காலத்தில் பாலம் திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. மேற்கத்திய திரைப்படங்களின் தாக்கத்தில் அந்தப் படத்தை கார்வண்ணன் எடுத்து இருந்தார். பாதிக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் அமைச்சர் ஒருவரை கடத்தி பாலம் ஒன்றில் பிணைக்கைதியாக வைத்திருப்பதும், போலீஸ் அவரை மீட்க போராடுவதும்தான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் நாயகனாக முரளி நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக நம்பியாரும், வில்லனாக முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் தலைவரும் ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்வதற்கு காரணமாக இருந்தவருமான பாஸ்கரன் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் திரைப்படம் இது. அதேபோல் டாக்டர் ராமதாசும் டாக்டர் ராமதாசாகவே ஒரு காட்சியில் இந்தப்படத்தில் தோன்றினார்.



இளைஞர்கள் செய்த செயல் சரியா, தவறா என்று தொலைக்காட்சியில் முக்கிய தலைவர்களின் கருத்து கேட்பது போல ஒரு காட்சி வரும். இதில் நிஜமான அரசியல்வாதிகளையும், அரசியல் விமர்சகர்களையும் பயன்படுத்தியிருந்தார் கார்வண்ணன். இந்தக் காட்சியில்  இனியன் சம்பத், சோ ராமசாமி, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த அடையாளத்துடன் படத்தில் காட்டப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றங்கள் எதற்கு இருக்கிறது என்று ராமதாஸ் படத்தில்  பேசியிருப்பார். பாரதியார் பாடல் ஒன்றையும் மேற்கோள் காட்டியிருப்பார். இதுதான் அவர் திரையில் தோன்றிய முதல் திரைப்படமாகும்.



பாலம் திரைப்படத்தை இயக்கிய கார்வண்ணன் சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் பட்டம் பெற்றவர். சிறந்த படிப்பாளி.. படிப்புக்காக எம்ஜிஆர் கையால் பரிசு வாங்கியிருக்கிறார். நெடுநாள் கழித்து அவரை சாலையில் பார்த்த எம்ஜிஆர் காரை நிறுத்தி விசாரித்திருக்கிறார். வேலையில்லாமல் இருப்பதாக கார்வண்ணன் அப்போது கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட எம்ஜிஆர் அவருக்கு ஆட்டோ வாங்கித் தந்து உதவியுள்ளார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் சினிமாத்துறையில் நுழைந்து பாலம் படத்தின் மூலம் சிறப்பான ஓபனிங்கை பெற்றார். பாலத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய புதிய காற்று திரைப்படமும் பெயர் வாங்கித் தந்தது. ஆனால், அதன் பிறகு அவர் இயக்கிய படங்கள் சோபிக்கவில்லை. முதல் படத்தின் வெற்றியை பிறகு எடுத்தப் படங்களால் நெருங்கவும் முடியவில்லை. 2015 இல் தனது 55 வது வயதில் கார்வண்ணன் இயற்கை எய்தினார்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் முதல்முறையாக நடித்தது, டாக்டர் ராமதாஸின் முதல் படம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற திரைப்படம் பாலம். சில படங்களை அது வெளியான காலகட்டத்தைத் தாண்டி மறுபடியும் எடுக்கும்போது மிகப்பெரிய வெற்றியை பெறும். பாலத்தை அப்படி யாரோனும் முயன்றுப் பார்க்கலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dr Ramadoss

அடுத்த செய்தி