Home /News /entertainment /

புஷ்பா இந்தி பதிப்பின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

புஷ்பா இந்தி பதிப்பின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

புஷ்பா

புஷ்பா

ரன்வீர் சிங் போன்ற இந்தியின் முன்னணி நடிகர்களின் 83 படம் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிகளை வசூலித்திருக்கிற நிலையில், புஷ்பாவின் இந்திப் பதிப்பு மட்டுமே 81 கோடிகளைத் தாண்டி வசூலித்திருப்பது சாதனை.

  • News18
  • Last Updated :
புஷ்பா படத்தின் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட பதிப்புகள் ஏற்கனவே ஓடிடியில் வெளியான நிலையில் இந்தி பதிப்பின் ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா வசூலில் சாதனை படைத்தாலும் அதன் இந்திப் பதிப்பு பெற்ற வரவேற்புதான் அனைத்தையும்விட ஹைலைட்டானது. முதல் நாளில் 3.33 கோடிகள் வசூலித்த இந்திப் பதிப்பு 17 வது நாளில் 6.25 கோடிகளை வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இன்றும் ஒரு கோடியைத் தாண்டி திரையரங்குகளில் புஷ்பாவின் இந்திப் பதிப்பு வசூலிக்கிறது.

டிசம்பர் 17 படம் வெளியானதிலிருந்து ஜனவரி 10 நேற்றுவரை புஷ்பாவின் இந்திப் பதிப்பு மட்டும் வரிகள் தவிர நெட் கலெக்ஷனாக 81.58 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் காரணமாக ஜனவரி 7 புஷ்பாவின் பிற மொழி பதிப்புகள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான போது இந்திப் பதிப்பை மட்டும் வெளியிடவில்லை.

Also read... Mare of Easttown - கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றுத் தந்த வெப் தொடர்

இந்நிலையில் ஜனவரி 14 ஓடிடியில் புஷ்பா இந்திப் பதிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். அதற்குள் புஷ்பாவின் ஓட்டம் நிறுத்தத்துக்கு வந்துவிடும்.

Also read... ஜப்பானில் வெளியாகும் தி கிரேட் இன்டியன் கிச்சன்...!

ரன்வீர் சிங் போன்ற இந்தியின் முன்னணி நடிகர்களின் 83 படம் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிகளை வசூலித்திருக்கிற நிலையில், புஷ்பாவின் இந்திப் பதிப்பு மட்டுமே 81 கோடிகளைத் தாண்டி வசூலித்திருப்பது சாதனை. இந்தியில் டப் செய்யப்பட்ட பிற இந்திய மொழிப் படங்களில் பாகுபலி 2 முதலிடத்திலும், 2.0 இரண்டாவது இடத்திலும், சாஹோ மூன்றாவது இடத்திலும், பாகுபலி முதல் பாகம் நான்காவது இடத்திலும் உள்ளன. புஷ்பா தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Allu arjun

அடுத்த செய்தி