Home /News /entertainment /

இந்திய இயக்குனர்கள் யாரும் செய்யாத உச்சகட்ட சாதனையை படைத்த ராஜமவுலி...

இந்திய இயக்குனர்கள் யாரும் செய்யாத உச்சகட்ட சாதனையை படைத்த ராஜமவுலி...

எஸ்.எஸ்.ராஜமெளலி

எஸ்.எஸ்.ராஜமெளலி

Director SS Rajamouli | ராஜமவுலி இயக்கிய அடுத்தடுத்த 2 படங்கள் ரூ. ஆயிரம் கோடியை வசூலித்துள்ளன. இது எந்த இயக்குனரும் ஏற்படுத்தாத சாதனையாகும்.

பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர். படங்களின் வழியே இந்திய இயக்குனர்கள் யாரும் செய்யாத சாதனையை ராஜமவுலி ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய சினிமாவில் பாலிவுட் படங்களின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் 2015-ல் வெளியான பாகுபலி இந்தி மொழி வட்டாரங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் அதன் அடுத்த பாகமான பாகுபலி 2 மீது அதிகம் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்தனர். படமும் எதிர்பார்த்த அளவுக்கு இருந்ததால், பாகுபலி 2 ஒட்டுமொத்தமாக ரூ. 1000 கோடியை வசூலித்தது.

பாகுபலி 2க்கு பின்னர் ராஜமவுலி எந்த படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்தாக தெலுங்கில் முன்னணியில் இருக்கும் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து படம் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இருவரும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தனர். இருவரையும் டாப் இயக்குனர் இயக்கியதால் ஆர்ஆர்ஆர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் இருந்தது.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 2 உடன் போட்டியிடாமல் ரிலீசை ஒத்தி வைத்தது முன்னணி நடிகரின் படம்

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பிரமாண்டமாகவும், கன்டென்ட் ரீதியாக வலுவானதாகவும் இருந்ததால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் ஆர்ஆர்ஆர் 3டி தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டது.

தென்னிந்திய மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ஆர்ஆர்ஆர் வெளியிடப்பட்டது. இதற்கு போட்டியாக மற்ற பெரிய ஹீரோக்கள் படம் வெளியாகவில்லை. இதனால் பெரும்பாலான திரையரங்குகளை ஆர்ஆர்ஆர் ஆக்கிரமித்தது.

இதையும் படிங்க - Beast : ரிலீஸிற்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் பீஸ்ட்..

இன்னும் சில நாட்களில் பீஸ்ட் மற்றும கேஜிஎஃப் 2 வெளியாகவுள்ள நிலையில் தற்போது வரை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் படம் ரூ. 1000 கோடி வசூலை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கிய அடுத்தடுத்த 2 படங்கள் ரூ. ஆயிரம் கோடியை வசூலித்துள்ளன. இது எந்த இயக்குனரும் ஏற்படுத்தாத சாதனையாகும். இதனை வேறு யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்விக்கும் விடையில்லை.

அடுத்ததாக ராஜமவுலி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை இயக்குகிறார். இந்த படமும் பிரமாண்ட பொருட் செலவில் ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்படும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Musthak
First published:

Tags: Rajamouli

அடுத்த செய்தி