என்னிடம் இருந்து தப்பித்தது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகை

நடிகை லைலா விஜயுடன் எடுத்த ஃபோட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

news18
Updated: April 23, 2019, 1:48 PM IST
என்னிடம் இருந்து தப்பித்தது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகை
விஜய்
news18
Updated: April 23, 2019, 1:48 PM IST
என்னிடம் இருந்து தப்பித்தது விஜய் மட்டும் தான் என்று நடிகை லைலா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிடோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் லைலா. அவர் விஜயுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் இவர் தற்போது விஜயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜயுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லைலா இந்த படத்தின் பெயரை சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்த பதிவில் என்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் தான் என்றும் பதிவிட்டுள்ளார்.
நடிகை லைலாவின் கேள்விக்கு ரசிகர்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர். அந்த பதிலில் அது உன்னை நினைத்து படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பலரும் பதில் அளித்து வருகின்றனர்.

சூர்யா, லைலா, சினேகா நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான படம் உன்னை நினைத்து. இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நடிகர் விஜய் தான். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக சூர்யா நடிப்பில் உருவானது இந்தப்படம்.

Also watch

First published: April 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...