கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் புதிய ஷுட்டிங் ஸ்பாட் எங்கு தெரியுமா?
கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் புதிய ஷுட்டிங் ஸ்பாட் எங்கு தெரியுமா?
கமல்
விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த வருட கோடையில் படம் திரைக்கு வருகிறது.
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்புக்காக விக்ரம் படக்குழு வெளியூர் சென்றுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி என மூன்று முக்கிய நடிகர்கள் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். வீரத்தில் வரும் அஜித்தைப் போல விக்ரமில் விஜய் சேதுபதிக்கு அரை டஜன் சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் கமல் மோதி ஜெயிப்பதாக கதை எழுதப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கியுள்ளது. ஒருமாதகாலம் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி என மூன்று பேருமே இந்த ஷெட்யூல்டில் கலந்து கொள்ளயிருக்கிறார்கள். விக்ரமில் நடிகர் அருள்தாஸ், சம்பத் ராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
விக்ரம் படத்தில் மலையாள நடிகர்களின் ஆதிக்கம் அதிகமுள்ளது. பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம். ஆண்டனி வர்க்கீஸ், செம்பன் வினோத் என பலர் நடிக்கின்றனர். கூடுதலாக ஹரிஷ் பெராடியும் விக்ரம் படப்பிடிப்பில் இணைய உள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டிசம்பரில் படமாக்கப்பட உள்ளன. விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளர் க்ரிஷ் கங்காதரனும் ஒரு மலையாளி என்பது முக்கியமானது.
விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த வருட கோடையில் படம் திரைக்கு வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.