• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கார்த்திக் நரேனின் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

கார்த்திக் நரேனின் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

முதல் படம் துருவங்கள் 16 லேயே கவனம் பெற்றவர் கார்த்திக் நரேன். அவரது படத்தையும், மேக்கிங் ஸ்டைலையும் மணிரத்னம், கௌதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கார்த்திக் நரேன் மாறன் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். அடுத்து அவர் இயக்கும் படத்தில் இளம் முன்னணி நடிகர் நாயகனாக நடிக்கிறார்.

முதல் படம் துருவங்கள் 16 லேயே கவனம் பெற்றவர் கார்த்திக் நரேன். அவரது படத்தையும், மேக்கிங் ஸ்டைலையும் மணிரத்னம், கௌதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டினர். கௌதம் கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்தை தயாரித்தார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன் நடிப்பில் இரண்டாவது படம் நரகாசூரன் ஆரம்பமானது.

கௌதமின் கடன்கள் காரணமாக படப்பிடிப்பு இழுத்தடித்தது. படம் முடிந்த பிறகு வெளியிடவும் முடியவில்லை. இறுதியில் படத்தை வேறொருவர் வாங்கிக் கொண்டார். எனினும் படம் இன்னும் வெளியாகவில்லை. கார்த்திக் நரேன் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து மாஃபியா - சேப்டர் 1 படத்தை எடுத்தார்

மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது

இதையடுத்து கார்த்திக் நரேன் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இவர்கள் இணையும் படத்தை ஐங்கரன் தயாரிக்கிறது. அதர்வா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் எதுவும் ஓடவில்லை.

Also read... இரு ஓடிடி தளங்களில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்!

பரதேசி, இமைக்கா நொடிகள் தவிர்த்து பெரிய வெற்றியை இதுவரை அவர் பெற்றதில்லை. விரைவில் வெளிவர இருக்கும் குருதி ஆட்டம் படமே அதர்வாவின் ஒரே நம்பிக்கையாக உள்ளது. கார்த்திக் நரேனின் படம் அவரது திரைவாழ்க்கைக்கு எக்ஸ்ட்ரா மைலேஜ் தரும்.

இதனிடையில் கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனஞ்செயன் சோனிலிவ் ஓடிடி தளத்தில் நரகாசூரனை வெளியிட முயற்சி எடுத்தார். சோனிலிவ் நிறுவனம் தனஞ்செயனை வெளியேற்றியதால் அந்த முயற்சி கைகூடவில்லை. வேறு ஓடிடி தளங்களுடன் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: