Home /News /entertainment /

விஜய் 67 படத்தை இயக்குகிறேன் - இயக்குனரின் விக்கிபீடியா தகவலால் பரபரப்பு!

விஜய் 67 படத்தை இயக்குகிறேன் - இயக்குனரின் விக்கிபீடியா தகவலால் பரபரப்பு!

விஜய்

விஜய்

இதையடுத்து விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் இல்லை அட்லி இயக்குகிறார் என பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.

  • News18
  • Last Updated :
விஜய்யின் 67 வது படத்தை தயாரிப்பது யார், இயக்குவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யூகங்கள் மட்டுமே உலவுகின்றன. இந்நிலையில் பிரபல இயக்குனரின் விக்கிபீடியா பக்கத்தில் விஜய்யின் 67 வது படத்தை அவர் இயக்குவதாக வெளியிடப்பட்டிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தற்போது தனது 65 வது படமான பீஸ்டில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் இல்லை அட்லி இயக்குகிறார் என பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், விஜய்யை வைத்து ஜில்லா படத்தை இயக்கிய நேசனின் விக்கிபீடியா பக்கத்தில், அவர் விஜய்யின் 67 வது படத்தை இயக்குவதாகவும், அது குறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அதிகாரப்பூர்வமாக இவர்தான் படத்தை இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளிவரும் முன்பு பிரபல இயக்குனரின் விக்கிபீடியா பக்கத்தில் இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Also read... காதலை கொல்லும் திருமணங்கள் - ராம் கோபால் வர்மா விளாசல் பதிவு!

விக்கிபீடியா பக்கத்தை இப்போது சம்பந்தப்பட்டவர்களே திருத்தி தகவல்களை பதிவேற்ற முடியும். நேசனின் விக்கிபீடியா பக்கத்தை அப்படி யாரேனும் தவறுதலாக பயன்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், விஜய்யின் 67 வது படத்தை உண்மையில் நேசன்தான் இயக்குகிறாரா என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Thalapathy

அடுத்த செய்தி