முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்.ஜே.பாலாஜி, சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளியின் வீட்ல விசேஷங்க!

ஆர்.ஜே.பாலாஜி, சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளியின் வீட்ல விசேஷங்க!

ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி

ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி

வீட்ல விசேஷங்க பாக்யராஜ் இயக்கி நடித்த படத்தின் பெயர். ஆர்.ஜே.பாலாஜி படத்தின் பெயர் மட்டுமில்லை, படமே ரீமேக்தான்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக சூரரைப்போற்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்தப் புதிய படத்துக்கு வீட்ல விசேஷங்க என பெயர் வைத்துள்ளனர். 

வீட்ல விசேஷங்க பாக்யராஜ் இயக்கி நடித்த படத்தின் பெயர். ஆர்.ஜே.பாலாஜி படத்தின் பெயர் மட்டுமில்லை, படமே ரீமேக்தான். இந்தியில் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தைதான் வீட்ல விசேஷங்க என்ற பெயரில் தமிழில் எடுக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பதாய் ஹோ படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார். தனது காதலியை திருமணம் செய்ய இருக்கும் நிலையில், ஆயுஷ்மான் குரானாவின் அம்மா கர்ப்பமாக இருப்பது தெரியவரும். பேரன், பேத்தி எடுக்க வேண்டிய வயதில் ஒரு அம்மா  கர்ப்பமானால், வீட்டில் அதனை எப்படி எதிர்கொள்வார்கள்.

Also read... வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ப்ரியா பவானி சங்கர்?

சென்டிமெண்டும் சிரிப்பும் கலந்து எடுக்கப்பட்ட பதாய் ஹோ இந்தியில் வெற்றி பெற்றது. அதனை போனி கபூர், ஸீ ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜியும், சானியா மல்கோத்ரா நடித்த வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் நடிக்கின்றனர்

சென்ற வாரம் கோவையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒன்றரை மாதத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

First published:

Tags: Actress Aparna Balamurali, RJ Balaji