புதிய ஒளிப்பதிவு திருத்த சட்டவரைவு கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது - சரத்குமார் கண்டன அறிக்கை

சரத்குமார்

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது, அவசியமற்றது என சரத்குமார் கண்டனம்.

 • Share this:
  ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்டவரைவு 2021 க்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திரைத்துறையினர் அனைவரும் ஒருமித்தக் குரலில் இதனை எதிர்க்கின்றனர். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரருமான சரத்குமாரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது, அவசியமற்றது என கண்டித்திருக்கும் அவர் தனது அறிக்கையில் பல விஷயங்களை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  "படைப்பாளியின் கற்பனைக்கு அரசாங்கம் தனது அதிகாரத்தால் அணைகட்ட எண்ணுவது மடமை. சமூக மாற்றத்துக்கான விதையை தங்களது படைப்புகளில் வெளிக்கொணரும் கலைஞன் மீது சுய விருப்பு, வெறுப்புகளை திணிப்பது கண்டிக்கத்தக்கது.
  ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மத்திய அரசு தடை செய்வதற்கோ, மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டிற்கு உத்தரவிடுவதற்கோ வழிவகுத்து திரைப்பட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

  Also Read : சினமாவில் நடிகர், நடிகையாக ஆசையா? நடிக்க வாய்ப்பு தரும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

  இச்சட்ட வரைவு நீதிமன்ற உத்தரவிற்கும் முரணானது என்பதால் மத்திய அரசு உடனடியாக ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்."

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: