வடிவேலு நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ஆகஸ்ட் இறுதியில் வெளியிட முயற்சிகள் நடைபெற்ற வருகின்றன.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன.
இதைத்தொடர்ந்து இறுதிகட்ட பணிகளை கவனித்து வருகிறார் சுராஜ். நகைச்சுவை வகையில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
அதற்கு ஏற்ற வகையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை வேகப் படுத்தியுள்ளனர். ஒருவேளை போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிய காலதாமதமானால், செப்டம்பரில் படம் திரைக்கு வந்துவிடும் என தெரிவிக்கின்றனர்.
Also read... இசையமைப்பாளராக மாறும் இயக்குநர் மிஷ்கின்
இத்திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். அத்துடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். அதிலும் பாடல் உருவாக்கும் பணிகள் லண்டனில் நடைபெற்றன. இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை வடிவேலு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu