முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யோகி பாபுவின் பன்னி குட்டி - மூன்று மாநில விற்பனை முடிந்தது!

யோகி பாபுவின் பன்னி குட்டி - மூன்று மாநில விற்பனை முடிந்தது!

யோகி பாபுவின் பன்னி குட்டி

யோகி பாபுவின் பன்னி குட்டி

லைகா நிறுவனம் இந்தியன் 2, பன்னி குட்டி, சிவகார்த்திகேயனின் டான், வடிவேலின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பன்னி குட்டி படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் திரையரங்கு விநியோக உரிமை விற்பனையாகி உள்ளது. 

பன்னி குட்டி 2019 இல் தொடங்கப்பட்ட நகைச்சுவை திரைப்படம். யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கருணாகரன், திண்டுக்கல் ஐ.லியோனி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். அனுசரண் முருகையன் இயக்கம். இதன் திரைக்கதையை காக்கா முட்டை மணிகண்டனுடன் இணைந்து அனுசரண் எழுதியிருந்தார். இதன் காரணமாக பன்னி குட்டி மீது திரையுலகில் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. லைகா படத்தை தயாரித்தது.

2020 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் கொரோனா பெருந்தொற்றால் தள்ளிப் போனது. தற்போது படம் முடிந்த நிலையில், அதன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா திரையரங்கு வெளியீட்டு உரிமையை 11 : 11 புரொடக்ஷன்ஸ் டாக்டர் பிரபு திலக் வாங்கியுள்ளார். இதனை லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also read... பிரபுதேவா, ரெஜினா நடிப்பில் விடலைப் பருவ காதலை சொல்லும் பிளாஷ்பேக்!

லைகா நிறுவனம் இந்தியன் 2, பன்னி குட்டி, சிவகார்த்திகேயனின் டான், வடிவேலின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறது. அத்துடன் படங்களை வாங்கி விநியோகிக்கவும் செய்கின்றனர். ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், அல்லு அர்ஜுனின் புஷ்பா - தி ரைஸ் ஆகிய படங்களின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை லைகா வாங்கியுள்ளது.

அதேநேரம் தாங்கள் தயாரித்த பன்னி குட்டி படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை இன்னொரு நிறுவனத்துக்கு தந்திருக்கிறார்கள். வாங்குவதில் மட்டுமில்லை விற்பதிலும் இருக்கிறது லாபம்.

First published:

Tags: Actor Yogibabu