பாலா இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. சூர்யாவுடன் ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் மதுரையில் தொடங்கப்படுகிறது.
நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் நடிப்பின் திசையை மட்டுமின்றி, சினிமாவில் மிகப் பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தவர் பாலா. அதன்பிறகு அவரது பிதாமகன் படத்தில் சூர்யா விக்ரமுடன் நடித்தார். பாலா தயாரிப்பில் மாயாவி திரைப்படத்தில் சிங்கம்புலி இயக்கத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் இந்த மாதம் 18ம் தேதி மதுரையில் தொடங்கப்பட உள்ளதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. சூர்யாவுடன் ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்க உள்ளார். சூர்யாவின் 41வது திரைப்படமாக தயாராகும் இந்தப் படத்திற்காக மதுரையில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலாவின் அவன் இவன், தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஜோதிகாவை வைத்து அவர் இயக்கிய நாச்சியார் திரைப்படம் பார்டரில் பாஸ் ஆனது. அதன்பிறகு தெலுங்கு அர்ஜுன் ரெட்டியை தமிழில் துருவ் விக்ரம் நடிப்பில் ரீமேக் செய்தார். ஆனால் பாலாவின் இயக்கத்தில் திருப்தியில்லாத படத்தயாரிப்பாளர் மொத்த படத்தையும் கைவிட்டு வேறு இயக்குனரை வைத்து அதே கதையை தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எந்த ஒரு இயக்குநருக்கும் இதுபோன்ற நிகழ்வு நடந்தது இல்லை. இந்த சரிவிலிருந்து மீண்டு நான் பழைய பாலா தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு இருக்கிறது. சூர்யா படத்தில் அதனை அவர் சாதித்துக் காட்டுவார் என்ற நம்பிக்கையும் அவரது ரசிகர்களுக்கு உள்ளது.
பாலா படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.