ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினிகாந்த் உதவுவதாக கூறினார்: உதவிக்காக காத்திருக்கிறோம்- மன நலம் பாதிக்கப்பட்ட ரசிகரின் தாயார்

ரஜினிகாந்த் உதவுவதாக கூறினார்: உதவிக்காக காத்திருக்கிறோம்- மன நலம் பாதிக்கப்பட்ட ரசிகரின் தாயார்

ரஜினியின் உதவிக்காக காத்திருக்கும் ரசிகர்

ரஜினியின் உதவிக்காக காத்திருக்கும் ரசிகர்

ரஜினியின் தீவிர ரசிகரான தன் மகனுக்கு உதவ வேண்டும் என்று ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு 3 ஆண்டுகளாக காத்திருக்கிறார் மனநலம் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகரின் தாயார் லெட்சுமி. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமி. அவர், கூலித்தொழில் செய்து வருகிறார்.  இவரது மகனான முத்தையா (35) என்பவர் ரஜினி காந்த்தின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

  ரஜினியின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் கட் அவுட் அடித்தும், பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், ரஜினியின் பெயரையே உச்சரித்துக்கொண்டு இருந்த முத்தையா கடந்த 2012 ஆம் ஆண்டில் மனநிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

  இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தி்த்து புகைப்படம் எடுத்துக்கொண்ட முத்தையாவின் தாயார் லெட்சுமி, தனது மகனுக்கு பொருளாதார உதவி செய்து தருமாறு மனு அளித்துள்ளார். அதனை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு, நிச்சயமாக உதவுவதாக தெரிவித்துள்ளார்.

  ஆனால், மூன்று வருடங்கள் ஆகியும் ரஜினிகாந்த் தரப்பில் எந்த உதவியும் கிடைக்காத நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு தனது மகனுடன் பல முறை நேரில் சென்று அவரை பார்க்க முயன்றுள்ளார்.

  ஆனால், ரஜினி வீட்டின் முன்புள்ள பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்றும், இதுகுறித்து ரஜினி மன்றத்திடம் பேசினால் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் தெரிவிக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து, அவருடைய தாயார் லெட்சுமி கூறுகையில், ‘ரஜினியின் திரைப்படம் வந்த உடன் முதல் காட்சியை பார்ப்பதற்காக என்னிடம் பணம் வாங்கி கொண்டு செல்வார். ஒரு படத்தை 3 முறையாவது பார்க்க வேண்டும் என்று அடம்பிடிப்பர். இரவு தூங்கும் போதெல்லாம் ரஜினி, ரஜினி என்று உச்சரித்து கொண்டிருப்பார். கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே உள்ளார். எனவே நடிகர் ரஜினி என் மகனுக்கு ரஜினி உதவ வேண்டும்"என்றார்.

  மேலும், ரஜினி ரசிகர் முத்தையா கூறுகையில், ’சிறுவயதில் இருந்தே நான் ரஜினி ரசிகன். அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. ரஜினி படம் வெளியான உடன், நான் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் அவருக்காக செலவு செய்வேன், ரஜினி என் உயிர், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன், அவரை ஒரு முறையாவது பார்த்து கைகொடுக்க வேண்டும்’ என்றார்.

  ரஜினியின் தீவிர ரசிகரான தன் மகனுக்கு உதவ வேண்டும் என்று, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு 3 ஆண்டுகளாக காத்திருக்கிறார் மனநலம் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகரின் தாயார் லெட்சுமி.

  செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Rajinikanth