கே.ஜி.எஃப் படத்தில் அதிரா கதாப்பாத்திரத்தில் நடித்தது இவரா...? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக படக்குழு அதிரா போஸ்டரை வெளியிட்டுள்ளது

news18
Updated: July 29, 2019, 11:29 AM IST
கே.ஜி.எஃப் படத்தில் அதிரா கதாப்பாத்திரத்தில் நடித்தது இவரா...? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சஞ்சய் தத்
news18
Updated: July 29, 2019, 11:29 AM IST
கே.ஜி.எஃப் படத்தில் அதிரா கதாப்பாத்திரத்தில் நடித்தது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எஃப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்தப் படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நான்கு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவில் முதல் 100 கோடி வசூல் என்று அசத்தி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.


தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்நிலையில், கே.ஜி.எஃப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற அதிரா என்ற கதாபத்திரத்தில் நடித்தது யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. அதிரா கதாபத்திரத்தில் நடித்தது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என்று படக்குழு அறிவித்துள்ளது.



சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.



Also watch

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...