முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'வாழ்க்கையின் முக்கிய பயணம்' - காதல் கசிந்துருகி திருமண அறிவிப்பை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

'வாழ்க்கையின் முக்கிய பயணம்' - காதல் கசிந்துருகி திருமண அறிவிப்பை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன்

நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன்

வருங்கால மனைவியுடன் எடுத்த புகை படத்தைப் பதிவிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியின் கையை பிடித்திருக்கும் போட்டோவை இன்று காலை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு திருமண செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார் .

வருங்கால மனைவியுடன் எடுத்த புகை படத்தைப் பதிவிட்டு உள்ளார்.இதைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சில மாதங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணி-ஆதி பின்னிசெட்டி மற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரின் இரண்டு பிரம்மாண்ட திருமணங்கள் நடந்தன. இந்த இரண்டு திருமணங்களும் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண். அவர் 2010-ல் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியானது. ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு ஹரீஷ் கல்யாண் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இதையடுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் திருமணம் நடக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஹரீஷ்.

அவர் அதில் கூறி இருப்பது "என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய களவையும் என் பெற்றோர் வயக்குவித்தார்கள் அதே போலவே இப்போது தங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள்.  நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியார்கள் ஒவ்வொரு வெற்றியையும் மைங்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.

Read More: ஹரீஷ் கல்யாணுக்கு டும் டும் டும்... விஜய தசமியில் வெளியான குட் நியூஸ்!

இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள். குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கன்/பத்திரிக்கை நண்பர்கள். எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

top videos

    எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்கைப் பயணத்தைத் தங்க்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் அனைவரிடமிருந்தும் இரப்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Actor Harish kalyan, Kollywood, Kollywood celebrities, Wedding Photoshoots