ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இரவின் நிழல் படத்தில் இருந்து, பெஜாரா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பார்த்திபன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பல்வேறு விருதுகளை குவித்த ஒத்த செருப்பு திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்த வித்தியாசமான முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் எடுத்துள்ளார்.
சுமார் 100 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இரவின் நிழல் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து, bejara என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு பார்த்திபனே வரிகள் எழுதியுள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.