முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மைடியர் பூதம் படத்தின் எனக்கு மட்டும் பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு

மைடியர் பூதம் படத்தின் எனக்கு மட்டும் பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு

மை டியர் பூதம்

மை டியர் பூதம்

பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவான மைடியர் பூதம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடிபெற்று வருகின்றன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள ‘மை டியர் பூதம்’ படத்தின் எனக்கு மட்டும் ஏன் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவான மைடியர் பூதம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடிபெற்று வருகின்றன.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மை டியர் பூதம் திரைப்படத்தில் இருந்து எனக்கு மட்டும் ஏன் ஏன் பாடல் வெளியானது. டி இமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை நாகேஷ் என்பவர் பாடியுள்ளார். குழந்தைகளை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Also read... தமிழகத்தில் 115 கோடியை வசூல் செய்த கே.ஜி.எஃப்-2

மேலும், இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்று திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபு தேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பஹீரா ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Prabhu deva