The Lord of the Rings - 3400 கோடியில் அமேசான் தயாரிக்கும் வெப் தொடர்

அமேசான் வெப் தொடர்

ஜேஆர்ஆர் டோல்கின் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் - தி பெல்லோஷிப் ஆஃப் தி ரிங் (2001), தி டூ டவர்ஸ் (2002), தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் (2003) என மூன்று திரைப்படங்களை பீட்டர் ஜாக்சன் இயக்கினார்.

  • Share this:
    திரைப்படத்தை விட அதிக செலவில் வெப் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. கேம் ஆஃப் த்ரோனின் ஒரு எபிசோடுக்கு 15 மில்லியன்கள் டாலர்கள் செலவிடப்பட்டது. இது உத்தேச கணக்கு. எனில், ஒரு சீஸனுக்கு எத்தனை மில்லியன் டாலர்கள் என நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அதைத்தாண்டிய பிரமாண்டத்தில் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் வெப் தொடரை அமேசான் பிரைம் வீடியோ தயாரிக்கிறது.

    ஜேஆர்ஆர் டோல்கின் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் - தி பெல்லோஷிப் ஆஃப் தி ரிங் (2001), தி டூ டவர்ஸ் (2002), தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் (2003) என மூன்று திரைப்படங்களை பீட்டர் ஜாக்சன் இயக்கினார். இந்த மூன்று திரைப்படங்களும் ஒரு மைல் கல் என்றால் மிகையில்லை. அதன் பிறகு இந்த கதையின் ப்ரீக்வெலாக டோல்கின் எழுதிய தி ஹாபிட் நாவலை மையப்படுத்தி இரு படங்கள் - தி ஹாபிட் - அன் அன்எக்ஸ்பெக்ட் ஜர்னி (2012), தி டிஸோலேஷன் ஆஃப் ஸ்மக் (2013) ஆகிய படங்களை எடுத்தார். இந்த ஐந்துமே எபிக் திரைப்படங்கள்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டோல்கினின் தி ஹாபிட், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் கதைகளின் காலகட்டத்துக்கு ஆயிரம் வருடங்கள் முன்பு இரண்டாவது மிடில் எர்த்தில் நடக்கும் கதையையே அமேசான் இப்போது தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நியூசிலாந்தில் முடிவடைந்த நிலையில், தொடரின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது.



    சுமார் 3400 கோடிகள் செலவில் உருவாகும் இந்தத் தொடரின் முதல் சீஸனில் மொத்தம் 20 எபிசோடுகள் உள்ளதாகவும், முதல் எபிசோடை 2022 செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடுவதாகவும், வாரா வாரம் ஒரு எபிசோடு என ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டோல்கினின் நாவலுக்கும், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் திரைப்படங்களுக்கும் உலகளாவிய ரசிகர்கள் உண்டு. அமேசானின் இந்தத் தொடர் அவர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடியது. இது வெளிவரும்போது, அதுவரை வந்த வெப் தொடர்களில் அதிக செலவில் எடுக்கப்பட்ட தொடராக இது இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: