நடிகை விஜயலெட்சுமி மீது வாடகை தரவில்லை என காவல்நிலையத்தில் புகார்..

8 மாதமாக நடிகை விஜயலெட்சுமி தான் தங்கியிருந்த அறைக்கு 3 லட்சம் வரை வாடகை தரவில்லை என தங்கும் விடுதி உரிமையாளர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை விஜயலெட்சுமி மீது வாடகை தரவில்லை என காவல்நிலையத்தில் புகார்..
விஜயலெட்சுமி
  • News18
  • Last Updated: October 22, 2020, 1:18 PM IST
  • Share this:
நடிகை விஜயலெட்சுமி தங்கியிருந்த  தனியார் லாட்ஜ்க்கு 8 மாதமாக 3 லட்சம் வரை வாடகை தரவில்லை என லாட்ஜ் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடிகை விஜயலெட்சுமி வாடகைக்கு அறை எடுத்து தங்கிவருகிறார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்க்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை வீடியோக்கள் மூலம் தெரிவித்து வந்த நடிகை விஜயலெட்சுமி, தான் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதி அறையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


Also read... கொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ள உதவும் 'கோவிராப்'.. ஐ.சி.எம்.ஆர் அனுமதி..

இந்நிலையில் 8 மாதமாக நடிகை விஜயலெட்சுமி தான் தங்கியிருந்த அறைக்கு 3 லட்சம் வரை வாடகை தரவில்லை என தங்கும் விடுதி உரிமையாளர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading