முதல் 3 நாட்களில் வசூலைக் குவித்த ’தி லயன் கிங்’

முதல் 3 நாட்களில் வசூலைக் குவித்த ’தி லயன் கிங்’
தி லயன் கிங்!
  • News18
  • Last Updated: July 22, 2019, 6:29 PM IST
  • Share this:
முதல் வார இறுதியில் அதிக வசூலைக் குவித்த 3-வது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது தி லயன் கிங்.

வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார். 1994-ம் ஆண்டு அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.

தி லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் 2140 திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று வெளியானது.


இந்தியாவில் இந்தப் படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதாவது, தி ஜங்கிள் புக் படத்தின் வசூலை விடவும் அதிக வசூல்.

வெள்ளியன்று வெளியான தி லயன் கிங் படம் முதல் நாளன்று ரூ.11 கோடியும், 2-வது நாளன்று ரூ.19 கோடியும், 3 வது நாளான நேற்று ரூ.25 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வெளியான 4 மொழிகளிலும் சேர்த்து முதல் 3 நாளில் ரூ.55 கோடி வசூலித்துள்ளது.

இந்தியாவில் முதல்வார இறுதியில் அதிகமாக வசூலித்த ஹாலிவுட் படங்களில் அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படம் ரூ.159 கோடியும், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ரூ.94 கோடியும் வசூலித்த நிலையில், தி லயன் கிங் படம் ரூ.55 கோடி வசூலித்து 3 -ம் இடத்தில் உள்ளது.வீடியோ பார்க்க: சூர்யாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு!

First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading