முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நகைச்சுவையில் முடிசூடா மன்னன்... நடிகர் நாகேஷ் நினைவு தினம் இன்று!

நகைச்சுவையில் முடிசூடா மன்னன்... நடிகர் நாகேஷ் நினைவு தினம் இன்று!

நாகேஷ்

நாகேஷ்

என்னதான் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நகைச்சுவை நடிகர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட நாகேஷின் சிம்மாசனம் ஒரு ராஜ சிம்மாசனம்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமா எப்பொழுதுமே நகைச்சுவைக்கு ஒரு நீண்ட பெரிய வரலாறை கொண்டது. அந்த வரலாற்றில் நாகேஷ் எனும் நடிகன் ஒரு முடி சூடா மன்னன். என்னதான் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் நாகேஷ் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக தன்னை வெளிக்காட்டி இருந்தாலும் கூட பாலச்சந்தரின் வருகைக்குப் பின்பு அவரது நடிப்புத் திறனே வேறு தளத்திற்கு சென்றது. சர்வர் சுந்தரம்,எதிர்நீச்சல் என தன்னுடைய மற்றுமொரு பரிமாணத்தை காட்டினார் நாகேஷ். ரஜினி நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு படத்தில் நாகேஷின் கதாப்பாத்திரம் சுவாரஸ்யமானதும் கூட.

அறுபது எழுபதுகளில் முண்ணனி நகைச்சுவை நடிகராக விளங்கிய நாகேஷ் எண்பதுகளின் இறுதியில் வில்லத்தனமான வேடங்களை ஏற்றார். கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் முதன்மை வில்லனாக கமலஹாசனின் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழிக்கும் வேடம் ஏற்றிருப்பார்.இது ஒரு பக்கமெனில் இதே கமலஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் நாகேஷ் காட்டிய அபார நடிப்பு அவர் பெயர் உள்ளவரை பேசப்படும். ரஜினிகாந்தின் அதிசியப் பிறவி திரைப்படத்தில் ஜெய்கணேஷ் உடன் சேர்ந்து நாகேஷ் காட்டிய வில்லத்தனம் கொடூரமானது,அதே சமயம் நக்கலானதும் கூட.தளபதியில் மம்மூட்டியின் கணக்கப் பிள்ளையாக சிறு வேடம் ஏற்றிருந்தாலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

Also read... சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று மாலை வெளியாகிறது..!

கமலஹாசனின் மற்றொரு படைப்பான மகளிர் மட்டும் திரைப்படத்தில் செத்த பிணமாக நாகேஷ் காட்டிய அபார நடிப்பு தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமானது.சிறு வசனம் கூட பேசாமல் பார்வைகளால் மட்டுமே மிகப்பெரும் நகைச்சுவை ராஜாங்கத்தை நடத்தியிருந்தார் நாகேஷ்.

ரஜினி கமல் மட்டுமின்றி விஜய் அஜீத் படங்களிலும் நாகேஷ் சிறப்பாய் மிளிர்ந்தார்.விக்ரமன் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக படத்தில் ஜெய் கணேஷீன் தந்தையாக நடித்திருப்பார்.விஜய்,நாகேஷ்,நம்பியார் என இவர்களுக்குள் நடக்கின்ற நகைச்சுவை காட்சிகள் ரசிக்கத்தக்கவை.

அதனைப் போலவே அஜீத் உடன் ராசி திரைப்படத்தில் இணைந்தார் நாகேஷ்.படத்தில் வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து நாகேஷ் செய்யும் நகைச்சுவை அனைத்துமே வயிலு குலுங்க சிரிக்க வைப்பவை. சில நடிகர்களுக்கு மட்டும் இறப்பு என்பது முற்றிலும் கிடையாது. அவர்கள் திரை வழியே எப்பொழுதுமே நம் உடன் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். என்னதான் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நகைச்சுவை நடிகர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட நாகேஷின் சிம்மாசனம் ஒரு ராஜ சிம்மாசனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor nagesh