Home /News /entertainment /

The Legend: எப்படி இருக்குறது தி லெஜெண்ட் திரைப்படம்?

The Legend: எப்படி இருக்குறது தி லெஜெண்ட் திரைப்படம்?

தி லெஜெண்ட்

தி லெஜெண்ட்

அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் கமர்சியல் மாஸ் படமாக 'தி லெஜண்ட்' உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்

    தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா தமிழில் அறிமுகமாகிறார். இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

    எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் கலந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் கமர்சியல் மாஸ் படமாக 'தி லெஜண்ட்' உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

    கார்த்தியின் விருமன் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?



    அரதப் பழசான கதை, மிக சுமாரான திரைக்கதை. கலாய்க்கும் மூடில் நண்பர்களுடன் போனால் பார்க்கலாம்.



    சுமாரான பொழுதுப்போக்கு படம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    படத்தில் சாங், ஃபைட், சாங், ரிப்பீட்டு...



    தாமதமான திரைக்கதை, பழைய ஸ்கிரிப்ட்... ஆனால் உங்கள் நண்பர்களுடன் சென்றால் நிச்சயம் என்ஜாய் செய்வீர்கள்.



    இரண்டாவது பாதிக்கு பாடி தாங்குமா எனத் தெரியவில்லை.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி