முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்த படத்திற்கு தயாராகும் லெஜெண்ட் சரவணன்… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

அடுத்த படத்திற்கு தயாராகும் லெஜெண்ட் சரவணன்… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

நடிகர் லெஜெண்ட் சரவணன்

நடிகர் லெஜெண்ட் சரவணன்

தனது லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கான விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற சரவணன், தி லெஜெண்ட் படத்தின் மூலம் நடிப்பில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார்.

  • Last Updated :

லெஜெண்ட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தொழில் அதிபரும், நடிகருமான சரவணன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தொழில் அதிபர் சரவணன் நடிப்பில் உருவான தி லெஜெண்ட் திரைப்படம் அன்று வெளியாகி கலவை விமர்சனங்களைப் பெற்றது. சைன்டிஸ்ட் கேரக்டரில் நடித்த சரவணன் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

தனது லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கான விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற சரவணன், தி லெஜெண்ட் படத்தின் மூலம் நடிப்பில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார்.

விருமன் பட நாயகி அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்…

தி லெஜெண்ட் படத்தில் சரவணனுடன் ஊர்வசி ரவுத்தலா, பிரபு, நாசர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜேடி – ஜெர்ரி இயக்கிய இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். பாடல்கள் மெகா ஹிட்டாகி, படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடித் தந்தன.

இந்த நிலையில் சரவணன் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக சரவணன் முன்பு கூறியிருந்தார்.

அந்த அடிப்படையில் தற்போது அவர் இயக்குனர்கள் சிலரிடம் கதைகளை கேட்டுள்ளார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்…. 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

top videos

    தி லெஜெண்ட் படத்தின் கதையம்சம் முந்தைய படங்களின் சாயலில் இருந்தாலும், இந்த படத்தின் மேக்கிங் வெகுவாக பாராட்டப்பட்டது. சரவணனின் அடுத்த படமும் தி லெஜெண்டைப் போலவே பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Kollywood