Home /News /entertainment /

சரவணனின் தி லெஜண்ட் ட்ரெய்லர் : யூடியூபில் 5 மில்லியன் வியூஸ்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்

சரவணனின் தி லெஜண்ட் ட்ரெய்லர் : யூடியூபில் 5 மில்லியன் வியூஸ்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்

தி லெஜண்ட் படத்தில் சரவணன்

தி லெஜண்ட் படத்தில் சரவணன்

ட்ரெய்லர் லான்ச்சில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பங்கேற்றனர்.

சரவணனின் நடிப்பில் வெளிவரவும் தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்திற்குள்ளாக 5 மில்லியன் வியூஸ்களைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். 'தி லெஜன்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

'தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க - தாத்தா முன்பு அவரது வசனத்தை பேசி அசத்திய செந்தில் பேத்தி!

அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய 'வாடி வாசல்' சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ நேற்று வெளியிடப்பட்டது. இதில், முன்னணி நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தி லெஜண்ட் ட்ரெய்லரைப் பார்க்க...



எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

இந்நிலையில் நேற்று வெளியான படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்திற்குள்ளாக 5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. மேலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளதால், தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் பெரும்பாலானோரால் அதிகம் விரும்பப்பட்டிருப்பதை அறியலாம்.
Published by:Musthak
First published:

Tags: Legend Saravanan

அடுத்த செய்தி