Home /News /entertainment /

தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட தமன்னா…

தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட தமன்னா…

சரவணன் - தமன்னா

சரவணன் - தமன்னா

The Legend Movie : தி லெஜெண்ட் படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். ஆக்சன், காமெடி, சென்டிமெண்ட் என மாஸ்ஸான படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

    சரவணன் நடித்துள்ள தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை தென்னிந்திய முன்னணி நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். இம்மாதம் 28-ம்தேதி இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

    தொழிலதிபர் சரவணா ஸ்டோர் சரவணன் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஜேடி - ஜெர்ரி இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

    மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

    'The Legend' ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்

    அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார்.



    இந்த திரைப்படத்தில் சரவணனுடன் இந்தி முன்னணி நடிககை  ஊர்வசி ரவுத்தலா  நாயகியாக நடித்துள்ளார்.  அதேபோல் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த நடிகர் விக்ரம் - ஜி.வி.பிரகாஷ், கேட்டு வைத்துக்கொண்ட சாண்டி.. சுவாரஸ்யங்கள்

    ஏற்கனவே தி லெஜெண்ட் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தெலுங்கு ட்ரெய்லரை நடிகை தமன்னா இன்று வெளியிட்டுள்ளார்.



    தி லெஜெண்ட் படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். ஆக்சன், காமெடி, சென்டிமெண்ட் என மாஸ்ஸான படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி