ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதுவரை ஓடிடி -க்கு வராத லெஜண்ட் படம்.. அண்ணாச்சி சரவணன் எடுத்த முக்கிய முடிவு!

இதுவரை ஓடிடி -க்கு வராத லெஜண்ட் படம்.. அண்ணாச்சி சரவணன் எடுத்த முக்கிய முடிவு!

தி லெஜெண்ட் படத்தில் ஹீரோ சரவணன்

தி லெஜெண்ட் படத்தில் ஹீரோ சரவணன்

பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் படத்தில் இருந்த நிலையில் தி லெஜெண்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தொழில் அதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்திற்கு வராத நிலையில், அது குறித்த முக்கிய முடிவை படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சரவணன் எடுத்திருக்கிறார்.

  தொழிலதிபர் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் லெஜெண்ட் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு  வந்தது.

  உலக அளவில் பல்வேறு சாதனைகளை செய்த தலைசிறந்த விஞ்ஞானி சரவணன், பிறந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சிவாஜி பட ரஜினிகாந்த் பாணியில்  அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புகிறார். அதற்குபிறகு அவர் வாழ்க்கையில் நடைபெறும் அதிரடி சம்பவங்களே லெஜெண்ட் படத்தின் கதை.

  சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நாயகிகளுடன் நடனமாடி தன்னுடைய கடையை பிரபலப்படுத்தி வந்தவர் தொழிலதிபர் சரவணன். அந்த விளம்பர படங்களை ஜெடி - ஜெர்ரி ஆகியோர் இயக்கி வந்தனர்.  இவர்கள் மூவரும்  இணைந்து லெஜெண்ட் திரைப்படத்தை எடுத்திருந்தனர்.

  மூன்று மாநிலங்களில் 100 நாள்கள் ஓடிய கமலின் நாயகன் படம்!

  லெஜெண்ட் படத்தில் சரவணன் நாயகனாக அறிமுகமானதால், படத்தில் நடிப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் பிரபலமானவர்களாக தேர்வு செய்திருந்தனர்.

  அந்த வகையில் பிரபு, மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார், சுமன்,  யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். அதில் நடிகர் விவேக் காலமானதால், படப்பிடிப்பில் பதிவு செய்யப்பட்ட அவரின் குரலையே படத்திற்கு பயன்படுத்தியிருந்தனர்.

  நடிகர்களை தவிர ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், இசைக்கு ஹாரிஷ் ஜெயராஜ் ஆகியோரை பயன்படுத்தியிருந்தனர். அவர்களின் பங்களிப்பு படத்திற்கு பெரும் உதவியாக அமைந்தது.

  ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

  பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் படத்தில் இருந்த நிலையில் தி லெஜெண்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

  இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக ஓர் அதிரடி முடிவை சரவணன் எடுத்துள்ளார். அதாவது, தனது தி லெஜண்ட் படத்தை எந்த ஓ.டி.டி. தளத்திற்கும் விற்பனை செய்ய சரவணனுக்கு விருப்பம் இல்லையாம். இதையடுத்து இந்தப் படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood