கமலை தொடர்ந்து மம்முட்டிக்கு விழா எடுக்கும் கேரள அரசு...!

மம்முட்டி மற்றும் கமல்

கேரள அரசு எடுக்கும் விழாவில் அனைத்து மொழி திரைநட்சத்திரங்களும் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மம்முட்டி திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆனதை கொண்டாடும்விதமாக விழா எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரளாவின் செய்தி ஒளிபரப்புதுறை மற்றும் திரைப்பட வளர்ச்சித்துறை அமைச்சர் ஷாஜி செரியன் சட்டசபையில் வெளியிட்டார்.

கமல் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை அப்போதைய அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு விழா எடுத்து கொண்டாடியது. மலையாளத்தில் மூத்த கலைஞர்கள் இருக்க, கமலுக்கு விழா எடுப்பதா என்று மலையாள நடிகர்கள் சங்கம் விழாவை புறக்கணித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனிப்பட்ட முறையில் விருப்பமுள்ளவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம் என அன்றைய சங்கத் தலைவர் இன்னசென்ட் கூறியிருந்தார். ஜெயராம் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் இன்னசென்ட் கிண்டலும் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் அரசு எடுக்கும் விழாவை நடிகர் சங்கம் புறக்கணித்தால் என்னாகும் என்பது அனைவருக்கும் தெரியும். மாறாக இந்த நிகழ்வு நடந்த சில தினங்களுக்குப் பின் முதல்வர் அச்சுதானந்தன் கலந்து கொண்ட விழாவில் அவருக்கு அருகே இன்னசென்ட் அமர்ந்திருந்தார்

Also read... பிரபல இயக்குனரின் படப் பெயருக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு...!

மம்முட்டி திரையுலகில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கேரள அரசு எடுக்கும் விழாவில் அனைத்து மொழி திரைநட்சத்திரங்களும் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளதுஆனால், கொரோனா பரவல் அதனை அனுமதிக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
Published by:Vinothini Aandisamy
First published: