ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இஸ்ரேலில் வெளியாகும் தி காஷ்மீர் ஃபைல்ஸ்!

இஸ்ரேலில் வெளியாகும் தி காஷ்மீர் ஃபைல்ஸ்!

தி காஷ்மீர் பைல்ஸ்

தி காஷ்மீர் பைல்ஸ்

தூதரக ஜெனரல் கோபி ஷோஷானி, இஸ்ரேலில் வெளியிடப்படும் இந்தப் பட போஸ்டரை வெளியிட்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் முதல் நாளில் 650 திரைகளில் வெளியாகியது. முதல் நாள் வசூல் ரூ 3.55 கோடி. இருப்பினும், விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் திரைகளின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது. தினசரி வசூல் படிப்படியாக வளர்ந்து ஒரே நாளில் 26 கோடி ரூபாயை எட்டியது.

  தென்னிந்திய மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம், உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிலும் வெளியாக உள்ளது. இந்த மகிழ்ச்சியை தி காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர்கள் பகிர்ந்துக் கொண்டனர். தூதரக ஜெனரல் கோபி ஷோஷானி, இஸ்ரேலில் வெளியிடப்படும் இந்தப் பட போஸ்டரை வெளியிட்டார்.

  விவேக் அக்னிஹித்ராய் பகிர்ந்த வீடியோவில், கான்சல் ஜெனரல் கோபி ஷோஷானி புதிய போஸ்டரை வெளியிட்டபோது, படத்தின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான விவேக்கின் மனைவியான பல்லவி ஜோஷி உடன் இருந்தார்.

  தஞ்சையில் கல்லூரி படிப்பு, 27 வயதில் ராக்கி பாயின் அம்மா - கவனம் ஈர்க்கும் அர்ச்சனா ஜோய்ஸ்!

  ”வரலாற்று ரீதியாக நான் பார்த்த படங்களில் இது மிக முக்கியமான திரைப்படம் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு வெற்றிகரமான படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது, மக்களிடையே பாகுபாடு மற்றும் வெறுப்பைக் கண்டிப்பது முக்கியம். அன்பு எல்லாவற்றையும் விட முக்கியமானது” என்று ஷோஷானி தெரிவித்திருந்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: The Kashmir Files