Home /News /entertainment /

இந்தியாவில் ₹50 கோடி வசூல் எடுக்குமா ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்? 

இந்தியாவில் ₹50 கோடி வசூல் எடுக்குமா ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்? 

ஜுராசிக் வேர்ல்ட்

ஜுராசிக் வேர்ல்ட்

ஜுராசிக் வேர்ல்ட் படங்களின் இறுதி பாகம் இந்தியாவில மட்டும் 50 கோடி ரூபாய் ஷேர் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • News18
  • Last Updated :
ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படம் இந்தியாவில் முதல் வார முடிவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

உலக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் ஜுராசிக் படத்தின் இறுதி பாகம் நாளை வெளியாகிறது. ஜுராசிக் வேர்ல்ட் டெமினியன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதற்கான முன்பதிவை சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது.  குறிப்பாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி மும்பை உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகிறது. இதில் இந்தியாவில் மட்டும் முதல் வார முடிவில் 50 கோடி ரூபாய் ஷேர் தொகை கிடைக்கும் என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

அதேபோல் முதல் நாள் 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என நம்புகின்றனர். முதன் முதலாக ஜுராசிக் பார்க் திரைப்படம் 1993 ஆண்டு வெளியாகியது.  அந்த படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்தார்.

அந்தப் படம் வெற்றி அடைந்தால் அதைத் தொடர்ந்து தி லாஸ்ட் வேர்ல்ட்; ஜுராசிக் பார்க், ஜுராசிக் பார்க் 3 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் 2015-ம் ஆண்டு முதல் ஜுராசிக் வேர்ல்ட் படங்கள் வெளிவந்தன. அதில் தற்போது இறுதி பாகம் நாளை வெளியாகிறது.

Also read... திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய நட்சத்திர ஜோடி

டைனோசர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் ஜுராசிக் திரைப்பட வரிசைகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளது. எனவே, இந்த திரைப்படம் பெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானாலும் நாளை முதல் Paid Preview காட்சிகள் திரையிடப்படுகின்றன. இதனால் நாளைய இந்த திரைப்படம் வெளியாகிறது என கணக்கிடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி