• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றமளித்த No Time To Die...!

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றமளித்த No Time To Die...!

நோ டைம் டூ டைய்

நோ டைம் டூ டைய்

உலக அளவில் இப்போது மிகப்பெரிய சினிமா சந்தையாக இருப்பது சீனா. பல ஹாலிவுட் படங்கள் சீன வசூலை நம்பியே உள்ளன. அதற்குக் காரணம் அங்கிருக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை.

  • News18
  • Last Updated :
  • Share this:
யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டூ டை எதிர்பார்த்ததைவிட குறைந்த வசூலைப் பெற்று ஏமாற்றமளித்துள்ளது. 

ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25 வது படமாக நோ டைம் டூ டை வெளியானது. செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட 56 சர்வதேச நாடுகளில் படத்தை வெளியிட்டனர். முதல் மூன்று தினங்களில் 90 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 110 மில்லியன் டாலர்களைத் தாண்டி வசூலித்து படம் நம்பிக்கையளித்தது

அக்டோபர் 8 ஆம் தேதி யுஎஸ் உள்பட பல நாடுகளில் படம் வெளியானது. இதில் படத்தின் யுஎஸ் வசூலை திரையுலகில் ஆவலுடன் எதிர்பார்த்தனர். 80 மில்லியன் டாலர்களை வார இறுதியில் படம் குவிக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், 55.20 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்து படம் ஏமாற்றம் அளித்துள்ளது. ஒருவாரம் முன்னதாக வெளியான வெனம் 2 முதல் வார இறுதியில் 90 மில்லியன் டாலர்களை வசூலித்து அசத்தியிருந்தது. அதில் கிட்டத்தட்ட 55 சதவீதமே நோ டைம் டூ டை வசூலித்துள்ளது.

நேற்றுவரை ஜேம்ஸ்பாண்ட் படத்தின் யுஎஸ் வசூல் 62.16 மில்லியன் டாலர்கள். யுஎஸ் தவிர்த்த பிற நாடுகளில் 259.02 மில்லியன் டாலர்கள். மொத்தமாக 321.19 மில்லியன் டாலர்கள். இந்தப் படத்தை சுமார் 250 மில்லியன் டாலர்கள் செலவில் எடுத்தனர். படத்தின் புரமோஷனுக்காக உலகளவில் 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆக, படத்தின் பட்ஜெட்டே 350 மில்லியன் டாலர்கள் வருகிறது.

Also read... சூப்பர் டூப்பர் நடிகை - நயன்தாராவுக்கு போர்ப்ஸ் இந்தியா புகழாரம்!

உலக அளவில் இப்போது மிகப்பெரிய சினிமா சந்தையாக இருப்பது சீனா. பல ஹாலிவுட் படங்கள் சீன வசூலை நம்பியே உள்ளன. அதற்குக் காரணம் அங்கிருக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை. ஹாலிவுட்டின் முக்கியமான திரைப்படங்கள் யுஎஸ்ஸில் 4000 திரையரங்குகளில் வெளியானால் சீனாவில் 40000 திரையரங்குகளில் வெளியாகும். நோ டைம் டூ டை இந்த மாதம் 29 ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. அங்கு வசூலிப்பதைப் பொறுத்துதான் படத்தின் வெற்றியும், தோல்வியும் நிர்ணயிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: