Home /News /entertainment /

விருமன் திரைப்படத்தின் விநியோகஸ்தர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை

விருமன் திரைப்படத்தின் விநியோகஸ்தர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை

 சக்திவேல் என்பவரின் நிறுவனத்தில் வருமான வரி துறையினர் சோதனை

சக்திவேல் என்பவரின் நிறுவனத்தில் வருமான வரி துறையினர் சோதனை

விருமன் திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை. 

  • News18
  • Last Updated :
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தை வெளியிடும் சக்திவேல் என்பவரின் நிறுவனத்தில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களையும்,  அவர் வாங்கி வெளியிடும் திரைப்படங்களையும் தமிழகத்தில் விநியோகம் செய்யும் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 5 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.



ஐந்து ஆண் அதிகாரிகள் மற்றும் இரண்டு பெண் அதிகாரிகள் என மொத்தம் ஏழு பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சக்திவேல் தன்னுடைய நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலமாக பல திரைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அதைப்போல் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் காட்டேரி திரைப்படத்தை வரும் 5-ம் தேதியும், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தை 12ஆம் தேதியும் அவர் தமிழகத்தில் விநியோகம் செய்கிறார். அதற்கான திரையரங்கு ஒப்பந்த பணிகள் நடைபெற்று வந்தன.

Also read... ஒரே நாளில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு உட்பட 4 தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு... சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

இந்த நிலையில் இன்று காலை முதல் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இவரை தவிர சூர்யாவின் உறவினர்களான எஸ்.ஆர்.பிரபு,  ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் கார்த்தியின் நண்பரான பிரின்ஸ் பிக்சர் லக்ஷ்மன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அன்புச் செழியன், கலைப்புலி எஸ்.தணு, சத்யஜோதி தியாகராஜன் மற்றும்  விநியோகஸ்தர்கள் மன்னர், எஸ்.பிச்சர் சீனு உள்ளிட்டவர்களின் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Income Tax raid

அடுத்த செய்தி