முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே நாளில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு உட்பட 4 தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு... சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

ஒரே நாளில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு உட்பட 4 தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு... சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

அன்புச் செழியன்

அன்புச் செழியன்

சூர்யா மற்றும் அன்புச் செழியனுக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் வருமான வரி சோதனை. 

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஏழு மாதங்களில் அந்த நிறுவனங்களில் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ்.தாணு எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்ய ஜோதி தியாகராஜன், பிரின்ஸ் பிக்சர் லக்ஷ்மன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதில் லட்சுமணனை தவிர மற்றவர்கள் தங்கள் நிறுவனம் மூலம் சில திரைப்படங்களை சொந்தமாகவும் விநியோகமும் செய்து வருகின்றனர்.

இந்த தயாரிப்பாளர்களை தவிர பிரபல விநியோகஸ்தர்களான அன்புச்செழியன், சக்திவேல், மன்னர், எஸ் பிக்ச்சர் சீனு உள்ளிட்டோர் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றன.

இதில் கலைபுலி எஸ்.தாணு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறார். அதில் குறிப்பாக கடந்த ஆறு மாதத்தில் அவர் ஜி.வி. பிரகாஷ் நடித்த செல்ஃபி, பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களை தன்னுடைய வி கிரியேஷன் நிறுவனம் மூலமாக தமிழகத்தில் வெளியிட்டார். அதேபோல் தற்போது தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அந்த திரைப்படத்தை செப்டம்பர் மாதம் தமிழகத்தில் சொந்தமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது. இது தவிர சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

இவரை போல தமிழ் சினிமாவின் பிரபல நிறுவனமான சத்ய ஜோதி அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. அந்த நிறுவனம் கடந்த 7 மாதத்தில் அன்பறிவு மற்றும் மாறன் ஆகிய படங்களை ஓ.டி.டியில் வெளியிட்டுள்ளது. அதேபோல் தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தை தயாரிக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனையில் எஸ்.ஆர். பிரபு முக்கியமான தயாரிப்பாளர். அவர் தயாரிப்பில் டாணாக்காரன், ஓ2, வட்டம் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகின. இது தவிர, உலக அளவில் வசூல் சாதனை படைத்த கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தை தமிழகத்தில் எஸ்.ஆர். பிரபு டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் வெளியிட்டார். அந்த திரைப்படத்தை கைபற்ற ஒரு முன்னணி நிறுவனம் போட்டியிட்டதாக கூறப்பட்டது. இருந்த போதிலும் தமிழகத்தில் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்துடன் வெளியிட்டப்பட்ட அந்தப் படம் தமிழகத்தில் மொத்தமாக 120 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. அதன் மூலம் எஸ்.ஆர். பிரபுவிற்கு கமிஷன் தொகையாக நான்கு கோடி ரூபாய் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டது. இருந்தாலும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தை கடும் போட்டிக்கு மத்தியில் களமிறக்கி அவர் வெற்றி அடைந்தார் என பலரும் பாராட்டினர். இது தவிர சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் விநியோகஸ்தர் அன்புச் செழியன் பல திரைப்படங்களுக்கு கடன் வழங்கியுள்ளார். அது தவிர இந்த வருடம் வெளியான அஜித்தின் வலிமை, தொழிலதிபர் சரவணன் நடித்திருக்கும் லெஜண்ட் ஆகிய திரைப்படங்களை தமிழகத்தில் விநியோகம் செய்துள்ளார்.

Also read... சமூக வலைதளங்களில் இருந்து விலகிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இந்த சோதனையில் மற்றொரு முக்கிய நபர் சக்திவேல். இவர் நடிகர் சூர்யாவின் நட்பு வட்டாரத்தில் உள்ளார். சூர்யா நிறுவனம் தயாரித்த பல படங்களை சக்திவேல் விநியோகம் செய்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த கார்கி படத்தை அவர் தமிழகத்தில் சூர்யாவுடன் இணைந்து வெளியிட்டார். அதேபோல் வரும் 5-ம் தேதி ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளியாகும் காட்டேரி மற்றும் கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் 12-ம் தேதி வெளியாகும் விருமன் படத்தையும் சக்தி வேல் வெளியிடுகிறார். இது தவிர அருள்நிதியின் D-Block படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இவர்களை போலா மன்னர், எஸ்.பிக்சர் சீனு ஆகியோர் வலிமை, கே.ஜி.எஃப்-2 உள்ளிட்ட படங்களின் ஏரியா விநியோக உரிமையை பெற்றிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் முக்கியமாக சூர்யாவுக்கு உறவினர் மற்றும் நண்பர்களான எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, லக்‌ஷ்மன், சக்திவேல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இவர்கள் சொந்தமாக படங்களை வெளியிட்டும் வருகின்றனர். அதேபோல் மற்றவர்கள் பைனான்சியர் அன்புச்செழியனுடன் நட்பில் உள்ளனர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anbuchezhian, Entertainment, IT Raid