• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுமூகத்தீர்வை எட்டிய தலைவி படத்தின் பஞ்சாயத்து...!

சுமூகத்தீர்வை எட்டிய தலைவி படத்தின் பஞ்சாயத்து...!

தலைவி ரிலீஸ்

தலைவி ரிலீஸ்

தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், படம் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து படத்தை ஓடிடிக்கு தருவது என முடிவெடுக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தலைவி படத்தை ஓடிடியில் வெளியிடுவது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை   சுமூகத்தீர்வை எட்டியிருக்கிறது. 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார் .எல்.விஜய். கங்கனா ரனவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்ஜிஆராகவும் நடித்துள்ளனர். ஜெயலலிதாவை பராக்கிரமம்மிக்கவராக சித்தரித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம், கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. சமீபத்தில், படம் செப்டம்பர் 10 வெளியாகும் என அறிவித்தனர். படத்தை திரையரங்கில் வெளியிட்ட ஒரு வாரத்தில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார். அப்படி செய்தால் மட்டுமே அதிக பணம் கிடைக்கும். நாள்கள் தள்ளிப் போனால், ஓடிடி தளங்கள் தொகையை குறைக்கும். ஆனால், இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், படம் திரைக்கு வருவதில் இழுபறி ஏற்பட்டது.



Also read... தெலுங்கு ஏஜென்ட் படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் தமிழா...?

தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், படம் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து படத்தை ஓடிடிக்கு தருவது என முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து பைசல் செய்யப்பட்டு, செப்டம்பர் 10 படம் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: