HOME»NEWS»ENTERTAINMENT»cinema the irandam kuthu movie release for the deepavali vin ana

தீபாவளிக்கு வெளியாகிறது இரண்டாம் குத்து திரைப்படம்..

நவம்பரில் வெளியாகும் படங்களுக்கு முற்றிலுமாக விபிஎஸ் கட்டணம் இல்லை என தற்போது அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க அறிவுறுத்தலை மீறி தன்னிச்சையாக படத்தை வெளியிட இரண்டாம் குத்து திரைப்பட குழு முடிவு செய்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகிறது இரண்டாம் குத்து திரைப்படம்..
இரண்டாம் குத்து பட போஸ்டர்
  • News18
  • Last Updated :
  • Share this:

தீபாவளிக்கு இரண்டாம் குத்து திரைப்படம் வெளியாகும் என நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கொரோனா ஊரங்குக்கு பின்னர் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் VPF பிரச்சனை தீராத காரணத்தினால் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை.

விபிஎஃப் கட்டணம் ரத்து செய்யப்படும் வரை எந்த புதிய படத்தையும் வெளியிட போவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ப்ரொஜெக்டர் நிறுவனங்கள் VPF கட்டணத்தில் பல சலுகைகளை அறிவித்து வருகிறார்கள்.





Also read... விஜய்யின் அதிரடி உத்தரவு - உறுதிமொழி கூட்டம் நடத்திய ரசிகர்கள் - அடுத்த பரபரப்பு

நவம்பரில் வெளியாகும் படங்களுக்கு முற்றிலுமாக விபிஎஸ் கட்டணம் இல்லை என தற்போது அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க அறிவுறுத்தலை மீறி தன்னிச்சையாக படத்தை வெளியிட இரண்டாம் குத்து திரைப்பட குழு முடிவு செய்துள்ளது. அதன்படி அப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published: