இந்திய திரையரங்குகளில் ஹாலிவுட்டின் படையெடுப்பு

ஹாலிவுட் படங்கள்

தமிழை பொறுத்தவரை அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் போன்ற திரைப்படங்களால் மட்டுமே இந்த ஹாலிவுட் படையெடுப்பை தடுத்து நிறுத்த முடியும்.

 • Share this:
  இந்திய திரையரங்குகளை இந்தியப் படங்களுக்குப் பதில் ஹாலிவுட் திரைப்படங்கள் நிறைக்க இருக்கின்றன. பெரிய பட்ஜெட் ஹாலிவுட் படங்கள் வெள்ளமாக வரவிருப்பது இந்திய சினிமாவுக்கு நல்ல அறிகுறியல்ல.

  கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு இந்திய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயங்கிய வேளையில் ஹாலிவுட் படங்களே திரையரங்குகளுக்கு கை கொடுத்தன. இப்போதும் இந்திய சினிமாக்கள் திரையரங்குகளில் முழுமையாக வெளியாகவில்லை. இருபது சதவீத படங்களே வருகின்றன. மீதி எண்பதில் சரிபாதி ஓடிடியில் வெளியாகின்றன. ஆனால், ஹாலிவுட் படங்கள் வாரத்திற்கு இரண்டு வெளியாகி இந்திய திரையரங்குகளை ஆக்கிரமிக்கின்றன.

  ஷாங் - சி, எஃப் 9 படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்க, ஹாரர் படமான மலிக்னென்டும் சென்ற வாரம் அவற்றுடன் இணைந்து கொண்டது. தலைவியை விட இந்த மூன்று படங்களும் அதிகம் வசூலித்து வருகின்றன. செப்டம்பர் 17 கோடியில் ஒருவன் உள்பட சில தமிழ் படங்கள் வெளியாக உள்ள நிலையில், ஹாலிவுட்டின் ஹாரர் த்ரில்லர் படமான டோண்ட் ப்ரீத் 2 படமும் வெளியாகிறது.

  அதனைத் தொடர்ந்து தி சூசைடு ஸ்குவைட் திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 24 ட்வைனி ஜான்சனின் ஜங்கிள் க்ரூஸ் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. அக்டோபர் 8 வெளியாகும் என்று சொல்லப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதியே திரைக்கு வருகிறது.

  அக்டோபர் எட்டாம் தேதி தி கொயட் பிளேஸ் 2 வெளியாகிறது. இப்படி தொடர்ச்சியாக ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியாக உள்ளன. மேட்ரிக்ஸ் நான்காம் பாகம், மார்வெலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என வருகிற எல்லாமே இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான, வசூலை அள்ளக் கூடிய திரைப்படங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழை பொறுத்தவரை அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் போன்ற திரைப்படங்களால் மட்டுமே இந்த ஹாலிவுட் படையெடுப்பை தடுத்து நிறுத்த முடியும். சின்ன பட்ஜெட் படங்கள் இவற்றுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க இயலாது என்பது யதார்த்தமான உண்மை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: