• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • The Innocent: உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் ஸ்பானிஷ் த்ரில்லர்!

The Innocent: உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் ஸ்பானிஷ் த்ரில்லர்!

த இன்னசெண்ட்

த இன்னசெண்ட்

த்ரில்லர் படமா இருக்கணும், ஆக்ஷன் படம் போல வேகமா நகரணும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கானது தி இன்னசென்ட்.

  • Share this:
இந்த வருடம் வெளிவந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸில் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது தி இன்னசென்ட். ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியிருக்கும் மினி வெப் சீரிஸ். இதனை இயக்கியவர் ஓரியோல் பாவ்லோ. இந்த பெயரை எங்கேயோ கேட்டதாக இருக்கிறதா...? கடந்த சில வருடங்களாக த்ரில்லர் பட விரும்பிகளின் மானசீக இயக்குனர் இவர்.

தி இன்னசென்ட் சீரிஸுக்கு ஒரு முன் கதை உண்டு. அமெரிக்க க்ரைம் த்ரில்லர் நாவலாசிரியர் Harlan Coben உடன் 2018-ல் நெட்பிளிக்ஸ் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அவரது 14 நாவல்களை நெட்பிளிக்ஸ் தயாரித்து வெளியிடும் என்பதே அந்த ஒப்பந்தம். அதன்படி முதல் சீரிஸாக தி ஸ்ட்ரேஞ்சர் வெளியானது. இரண்டாவது தி வூட்ஸ். மூன்றாவதாக இந்த வருடம் வெளியாகியிருக்கும் சீரிஸ் தி இன்னசென்ட். இயக்கம் ஓரியோல் பாவ்லோ.

பாரில் ஒரு சின்ன தள்ளுமுள்ளு சண்டை. நாயகன் தன்னை தாக்க வரும் இளைஞனை தடுத்து தள்ளிவிட, அவன் தலை கல்லில் மோதி மரணமடைகிறான். நாயகன் கைது செய்யப்படுகிறான், தெரியாமல் நடந்ததாக இறந்தவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கிறான். நீதிமன்றம் நாயகனை சிறையில் அடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்பது வருடங்கள் கழிந்து விடுதலையாகும் நாயகன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகையில் திடீரென வேறொரு திசையிலிருந்து பிரச்சனை கிளம்புகிறது. பணி நிமித்தம் காரணமாக வெளியூர் செல்லும் அவனது மனைவி வேறொருவனுடன் தங்கியிருக்கும் வீடியோ நாயகனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேநேரம் நாயகன் அவனிருக்குமிடத்தில் தாக்கப்படுகிறொன். தனது மனைவியுடன் இருப்பது யார், தன் மீதான தாக்குதலுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதா. நாயகன் ஒருபக்கம் விடை தேட முயற்சிக்க, இன்னொருபுறம் ஒரு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொள்கிறார். போஸ்ட் மார்டம் நடத்துகையில் அவளது அடிவயிற்றில் இருக்கும் டாட்டூ இறந்தது கன்னியாஸ்திரி இல்லை என்பதை உணர்த்துகிறது. மேலும், இறப்பதற்கு சில மணி முன்னால் அவள் யாருடனோ உறவு கொண்டிருக்கிறாள் என்பதும் தெரிய வருகிறது.

கன்னியாஸ்திரி போர்வையில் வசித்து வந்தது யார் என்று போலீஸ் தேடத் தொடங்குகையில், உயர்மட்ட அதிகாரிகள் அந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மேலும் ஒரு பெண்ணை தேடத் தொடங்குகிறார்கள். இருவேறு இடங்களில் நடக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைகள், கன்னியாஸ்திரி வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, நாயகனை தேடிவருகையில் ஒரே பாதைக்கு திரும்பி சஸ்பென்ஸை கூட்டுகிறது.

த்ரில்லர் படமா இருக்கணும், ஆக்ஷன் படம் போல வேகமா நகரணும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கானது தி இன்னசென்ட். மொத்தம் எட்டே எபிசோடுகள். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு லாரி ட்விஸ்டுகள். பரபரவென பாய்ந்து பிளாஷ்பேக்கிற்கு செல்லுகையில் கதையின் கனமும் சஸ்பென்ஸும் கூடுகிறது.

ஓரியோல் பாவ்லோ 2010-ல் வெளியாகி உலகமே கொண்டாடிய 'ஜுலியாஸ் ஐ' திரைப்படத்தின் கதாசிரியர். அதற்கு முன் சில படங்களை இயக்கியிருந்தாலும், 2012-ல் இவர் இயக்கிய 'தி பாடி' திரைப்படம் இவரை தனித்து அடையாளம் காட்டியது. ஒரு சின்ன முடிச்சில் ஆரம்பித்து, 360 டிகிரியில் சுழன்று கதைசொல்லும் பாங்கு இவருடையது. தி பாடி திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இந்தியில் ரீமேக் செய்தார். 2017-ல் வெளியான இவரது 'தி இன்விஸிபிள் கெஸ்ட்' திரைப்படம் உலக அளவில் ஹிட்டடித்தது. தமிழில் மட்டும் இதற்கு குறையாமல் 100 விமர்சனங்கள் வந்திருக்கும். இந்தப் படத்தை இந்தியில் அமிதாப், தாப்ஸி நடிப்பில் 'பட்லா' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதையடுத்து அவர் இயக்கிய 'மிர்ரேஜ்' இன்னொரு அதகளம்.

ஓரியோல் பாவ்லோ தி இன்னசென்டிலும் கடைசிவரை நம்மை திரைக்கு முன் கட்டிப்போடுகிறார். இந்த வருடத்தின் சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் இதுவும் ஒன்று. தவறவிடாதீர்கள். அதேநேரம், இது குழந்தைகளுக்கானதல்ல.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: