பிரசாந்த் நடிக்கும் ரீமேக் படத்தை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்?

நடிகர் தியாகராஜன் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான உரிமையை வாங்கியுள்ளார்.

news18
Updated: August 30, 2019, 10:05 AM IST
பிரசாந்த் நடிக்கும் ரீமேக் படத்தை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்?
கௌதம் மேனன்
news18
Updated: August 30, 2019, 10:05 AM IST
தேசிய விருதுகளைப் பெற்ற இந்தி படமான ‘அந்தாதுன்’ திரைப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்த திரைப்படம் ’அந்தாதுன்’.

சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் ஆவார்.


நடிகர் தியாகராஜன் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான உரிமையை வாங்கியிருந்தார்.

இது குறித்து நடிகர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது.

நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்' என்றார்.

Loading...

தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது என்றும் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரசாந்த் நடிக்க உள்ள இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Also see...

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...