• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எரோட்டோமேனியா நோய் பின்னணியில் தயாராகும் விஜய் படம்...?

எரோட்டோமேனியா நோய் பின்னணியில் தயாராகும் விஜய் படம்...?

விஜய்

விஜய்

கடந்த இரு தினங்களாக வேறு ஒரு தகவலும் இணையத்தில் வலம் வருகிறது. எரோட்டோமேனியா என்ற நோய் பின்னணியில் பைடிபள்ளி விஜய் படத்தின் கதையை எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய்யின் 66 வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

விஜய் தற்போது தனது 65 வது படமான பீஸ்டில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கம். சன் பிக்சார்ஸ் தயாரிப்பு. பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. பிறகு சென்னை புறநகரில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினர். விஜய்யுடன் ஷைன் டாம் சாக்கோ, செல்வராகவன் உள்பட பலர் நடித்தனர். சென்னையில் பெய்து வரும் பருவ மழையால் பீஸ்ட் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் படப்பிடிப்பை நிறைவு செய்து அடுத்த வருட ஆரம்பத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து விஜய் தெலுங்குப்பட இயக்குனர் வம்சி பைடிபள்ளிக்கு கால்ஷீட் தந்துள்ளார். விஜய்யின் 66 வது படமான இதனை தில் ராஜு தயாரிக்கிறார். படம் குறித்த யூகச் செய்திகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. முதல் தகவல், படத்துக்கு தமன் இசையமைக்கிறார் என்பது. ராம் சரணை வைத்து ஷங்கர்  இயக்கும் படத்துக்கு தமன்தான் இசை. அதை வைத்து இப்படியொரு தகவலை கசியவிட்டுள்ளனர்.



கடந்த இரு தினங்களாக வேறு ஒரு தகவலும் இணையத்தில் வலம் வருகிறது. எரோட்டோமேனியா என்ற நோய் பின்னணியில் பைடிபள்ளி விஜய் படத்தின் கதையை எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. எரோட்டோமேனியா என்பது நம்மை ஒருவர் தீவிரமாக அன்பு செய்கிறார் என்று எந்த காரணமும் இல்லாமல் நம்புவது. அந்த நபரை நாம் சந்தித்திருக்க வேண்டும் என்பதில்லை. சந்திக்காமலே, அவர் நம்மீது அளவுகடந்த ப்ரியத்தில் இருக்கிறார் என நினைத்துக் கொள்வதுதான் எரோட்டோமேனியா.

Also read... Thalapathy 66: தளபதி 66-ல் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?

விஜய் ஆக்ஷன் ஹீரோ ஆன பிறகு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களை பார்க்க முடியவில்லை. வம்சி பைடிபள்ளியின் படம் குறித்து வரும் தகவல்கள் வழக்கமான விஜய் படங்களிலிருந்து மாறுபட்டியிருக்கிறது. இது உண்மையாக இருந்தால் பல வருடங்களுக்குப் பிறகு வித்தியாசமான விஜய்யை ரசிகர்கள் திரையில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: