• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் ஒன்றிணையும் ஓ மணப்பெண்ணே கூட்டணி...!

மீண்டும் ஒன்றிணையும் ஓ மணப்பெண்ணே கூட்டணி...!

 ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே

ஜெய் பீமுக்கு முன் சத்தமில்லாமல் ரசிகர்களை கவர்ந்த இன்னொரு திரைப்படம், ஓ மணப்பெண்ணே. டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான இந்தப் படத்தை பரவலாக அனைவரும் பார்த்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீபத்தில் ஓடிடியில் வெளியான படங்களில் ஜெய் பீம் அசுரத்தனமான வரவேற்பை பெற்றது. இந்திய ஓடிடி வெளியீட்டில் ஜெய் பீம் ஒரு மைல் கல் என்றால் மிகையில்லை. படம் இந்தியாவைத் தாண்டி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

ஜெய் பீமுக்கு முன் சத்தமில்லாமல் ரசிகர்களை கவர்ந்த இன்னொரு திரைப்படம், மணப்பெண்ணே. டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான இந்தப் படத்தை பரவலாக அனைவரும் பார்த்தனர். தெலுங்கு பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்கான இதில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்தனர். கார்த்திக் சுந்தர் படத்தை இயக்கியிருந்தார். தெலுங்குப் பட தயாரிப்பாளர்களான சத்தியநாராயண கொனரு, ரமேஷ் வர்மா படத்தை தயாரித்திருந்தனர்

Also read... திரையரங்கில் வெளியாவதில் சிக்கல்... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் மகான்...?

படத்துக்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ந்தவர்கள், தொடர்ந்து தமிழில் படம் தயாரிப்போம் என்றனர். சமீபத்திய தகவல், இதே கூட்டணி மேலும் ஒரு படத்தில் இணைகிறது. மணப்பெண்ணேயில் நடித்த ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் பிரதான வேடத்தில் நடிக்க கார்த்திக் சுந்தர் படத்தை இயக்குகிறார். இதுவும் காதல் கதைதானாம். ஆனால், இதுவரை திரையில் பார்க்காத காதலாக இருக்குமாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: