வாத்தி பலவகையில் தனுஷுக்கு முக்கியமான படம். இந்தி, ஆங்கில படங்களில் நடித்திருக்கும் தனுஷின் முதல் நேரடி தெலுங்குப் படம் வாத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் தமிழ், தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்தில் நடிக்கிறார். இதன் நாயகி சம்யுக்தா மேனன் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வலம் வருகின்றன.
படவரிசையை சீட்டுக்கட்டைவிட வேகமாக கலைத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். நானே வருவேன் படத்தை தொடங்கியவர் அதை முடித்த பின் சேகர் கம்முலா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நானே வருவேனை ஓரமாக ஒதுக்கி வைத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்தார். பட அறிவிப்பு வந்த உடனேயே வாத்தி என்ற படத்தின் பெயரையும் அறிவித்தனர். தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என பெயர் வைத்துள்ளனர்.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று யோசிப்பதற்குள் படத்தின் பூஜை போடப்பட்டது. கையோடு ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கி தனுஷின் தோற்றத்தையும் வெளியிட்டனர். வாத்தியில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிப்பதாக சொல்லப்பட்டது. படபூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், படத்திலிருந்து அவர் விலகியதாக செய்திகள் வலம் வருகின்றன. இது குறித்து கேட்டதில், சம்யுக்தா மேனன் படத்திலிருந்து விலகியதாகச் சொல்வது அடிப்படையில்லாத வதந்தி என படக்குழு கூறியுள்ளது. சம்யுக்தா வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாகவும் ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
வாத்தி பலவகையில் தனுஷுக்கு முக்கியமான படம். இந்தி, ஆங்கில படங்களில் நடித்திருக்கும் தனுஷின் முதல் நேரடி தெலுங்குப் படம் வாத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.